நத்தார் பண்டிகைகளை ஒட்டி அமெரிக்கா, ஐரோப்பா மீது அல்கைதா தாக்கலாம். INTERPOL
பாரிஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறி வைத்து அல் காய்தா தீவிரவாதி கள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று அனைத் துலகப் போலிசார் தெரிவித் துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் திலுள்ள அனைத்துலகப் போலிசாரின் அலுவலகத்திலிருந்து அத்தகவல் கிடைத்ததாக இன்டர் போல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அல் காய்தாவின் அந்த மிரட்டல் பற்றிய தகவல் குறித்து அனைத்துலகப் போலிசார் அந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 188 நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் வேளையில் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் பல வாரங்களாகவே முழு விழிப்பு நிலையில் இருந்து வருகின்றன.
சனிக்கிழமை சுவீடனில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலின்போது நல்லவேளையாக கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந் தவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை என்று ஐரோப்பியத் தகவல்கள் கூறின. மும்பையில் 2008-ம் நடந்த தாக்குதல் போன்ற தாக்குதலை நடத்த அல் காய்தா திட்டமிட்டிருக்கலாம் என்று மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரி களும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பா செல்லவிருக்கும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது. ஜப்பானும் இதுபோன்ற பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment