Tuesday, December 21, 2010

பிரிட்டிஷ் சிறையிலிருந்து மீண்ட விக்கிலீக்ஸின் நிறுவனர் எதிர்த்து நிற்கிறார். By Patrick Martin

வியாழன் மாலையும் வெள்ளி காலையும் தொடர்ச்சியாகக் கொடுத்த பல பேட்டிகளில் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே தன்னுடைய அமைப்பு ஸ்வீடிஷ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசியல் அதிகாரிகளின் தாக்குதலிருந்து வலிமையாக வெளிப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க இராஜதந்திரத் தகவல் கேபிள்கள் பற்றி இணைய தளத் தகவல்கள் காலவரையறையற்றுத் தொடரும் என்றார்.

போலித்தனப் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களுக்காக ஸ்வீடன் நாடு கோரியிருந்த அந்நாட்டிற்கு நாடுகடத்திலுக்காக பிணை எடுப்பினால் ஒன்பது நாட்கள் லண்டனில் விக்டோரியா காலத்து வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்து வெளியேவந்தது முதல் 24 மணி நேரத்தில் அசான்ஜ் பல அறிக்கைகளை வெளியிட்டார்.

வியாழனன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் லண்டனில் பேசிய அசாங்கே ஸ்வீடன் நாட்டின் குற்ற விசாரணை நடவடிக்கை “ஒரு சேற்றை வாரி இறைக்கும் செயலாகும்” என்றார்.

“முக்கிய சக்திகளை அம்பலப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஒருவருக்கு அவர் முக்கிய எதிர்ப்பாளரால் தாக்கப்படுவது, அவருடைய வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளும் கண்காணிக்கப்படுதல் என்பது இயல்பே” என்று அவர் கூறினார்.

“இது, எங்கள் அமைப்பைத் தாக்குவதற்காகத்தான் தொடக்கப்பட்டது என்று கூறமுடியாது, ஏனெனில் எங்களிடம் அதற்கான நிரூபணங்கள் இல்லை, ஆனால் தாக்குதல் தொடங்கியபின், அது மிகவும் ஆக்கிரோஷமான வகையில் எங்கள் அமைப்பைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

“ஒரு கானரியை விழுங்கியது போல்தான் பாதுகாப்பு செயலர் கேட்ஸ் நான் கைது செய்யப்பட்டு விட்டேன் என்பதைக் கேட்டபோது உதிர்த்த இழிந்த சிரிப்பு இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

“இங்கிலாந்தில் நான் இருப்பதிலிருந்து எங்கள் கவலைகளில் ஒன்று ஸ்வீடன் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ள நடவடிக்கை—மிக விந்தையான, அசாதாரண வகையில் நடைபெறுவது—உண்மையில் அமெரிக்காவிற்குப் பின்னர் எளிதில் கொண்டு செல்லும் நடவடிக்கையை எளிதாக்கிவிடும் முயற்சியா என்றுதான் தோன்றுகிறது” என அசாங்கே கூறினார்.

கிட்டத்தட்ட வீட்டுக் காவல் நிலையில் கிராமப்புற சபோக்கிலுள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அசாங்கே, நிருபர்களிடம் கருத்தைக் கூறியபோது, அமெரிக்கா மேற்கொண்டுள்ள “அந்நாட்டிற்கு என்னைக் கொண்டு செல்லும் முயற்சி பெருகிய முறையில் நடக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது” என்றார்.

இன்னும் வேறுவகையான தாக்குதல்கள் இருந்தன என்றார் அவர். “ஒரு சட்ட விரோத விசாரணை எனத் தோன்றுவதையும் விக்கிலீக்ஸ் எதிர்கொள்கிறது….எங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களுடைய கணனிகள் ஆய்விற்காகப் பறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன, இன்னும் பல இதேபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன….” அமைப்பின் நேர இருப்புக்களில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக தொழில்நுட்ப மற்றும் சட்டபூர்வத் தாக்குதல்கள் இணைந்து வருகின்ற வகையைச் சமாளித்துப் போராடச் செலவழிக்கப்படுகின்றன என்றார் அவர்.

அமெரிக்காவில் தன்னைக் கைதுசெய்து படுகொலை செய்ய வேண்டும் என்பதற்கான பகிரங்க அறைகூவல்கள் “மிகத்தீவிரமானவை” என்றார் அவர். “சமீபத்தில் அதன் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவதில்லை என்பதைத்தான் அமெரிக்கா காட்டியுள்ளது. சட்டத்தின் ஆட்சியை அனுமதிப்பது இல்லை என்பது போல் தோன்றும் ஒரு பெரும் வல்லரசுடன் விவகாரம் என்பது தீவிரமான தன்மையை உடையது.”

இரு அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளில், NBC ன் Today Show, ABC யின் Good Morning America ஆகியவற்றில், ஸ்வீடனில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் தன் நிரபராதித் தன்மையை உறுதியாக வலியுறுத்தி தனக்கு எதிராக ஸ்வீடிஷ் அதிகாரிகள் எந்தச் சான்றுகளையும் நீதிமன்றத்திலோ அல்லது அவருடைய ஸ்வீடன் நாட்டு வக்கீல்களிடமோ கொடுக்கவில்லை என்றும் அசாங்கே கூறினார்.

இக்குற்றச்சாட்டுக்களின் முழு நோக்கமும் தன்னைக் காவலிலே வைத்து அமெரிக்காவிற்கு எடுத்து செல்லுவதற்குத்தான் என்று அவர் எச்சரித்தார். அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு நடுவர் நீதிமன்றம் உளவுத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“இந்த இழிவான செயல் இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிரான, நடைமுறையில் என்னுடைய அமைப்பிற்கு எதிரான குற்றவிசாரணை இரகசியமாக நடத்தப்படுகிறது என்பது அமெரிக்காவில் பெரும் தவறு நடப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது” என்று Today Show வில் அசாங்கே கூறினார்.

அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லே மானிங்கை அமெரிக்கா நடத்துவது குறித்தும் அவர் கவலையைத் தெரிவித்தார். விக்கிலீக்ஸிற்கு கசியவிடப்பட்ட தகவல்கள் சிலவற்றிலேனும் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று இராணுவம் கருதி அவரைக் காவலில் வைத்துள்ளது. (See, “Accused WikiLeaks source Bradley Manning held in solitary confinement)

ABC பேட்டியாளர் ஜோர்ஜ் ஸ்டிபனோப்போலொஸ் வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸில் அமெரிக்க அரசாங்கம் அசாங்கே மானிங்குடன் சேர்ந்து சதிசெய்து அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக ஆவணங்களைப் பெற முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று தெரிவித்துள்ளதற்கு அசாங்கே விடையிறுத்தார்: “செய்தி ஊடகத்தில் வெளிவருவதற்கு முன் பிராட்லி மானிங் என்ற பெயரைக் கூட நான் கேட்டதில்லை. விக்கிலீக்ஸின் தொழில்நுட்பம் ஆரம்பத்திலிருந்தே தகவல்களை அளிக்கும் நபர்களுடைய அடையாளம், பெயர்கள் பற்றி நாங்கள் ஒருபொழுதும் அறியமுடியாது என்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.” அப்பொழுதுதான் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஸ்டீபனோபோலோஸால் ஸ்வீடன் நாட்டில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலித்தனத் தயாரிப்புக்களா என்று கேட்கப்பட்டதற்கு, அசாங்கே கூறினார்: “இரு பெண்களுக்கும் இடையே நடந்த பரிமாற்றத் தகவல்கள் அறியப்பட்டுள்ளது அவை தயாரிப்புத்தான் என்று எனக்குக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்வீடிஸ் பொலிஸ் அவற்றை வெளியிட மறுத்துவிட்டனர்.” அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக இருவருடனும் பாலியல் தொடர்பு கொண்டாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர், “ஒருபொழுதும் இல்லை” என்று பதில் கூறினார்.

இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேட்டியாளர்கள் விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தும் செயல்கள் இராஜதந்திரிகளுடைய வாழ்விற்கு ஆபத்து அல்லது “அமைதிக்கு நாசம் விளைவிக்கக்கூடும்” என்ற கருத்துக்களைக் காட்டினர். இதற்குப் பதில் கூறும் வகையில் அசாங்கே பிரிட்டிஷ் ஏடான கார்டியன் வெள்ளிக்கிழமை பதிப்பைக் காட்டினார். இச்செய்தித்தாளுக்கு ஒரு புதையல் போன்ற தூதரகத் தகவல் கேபிள் ஆவணங்களை அணுகும் முழு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் முக்கிய தகவலான காஷ்மீரின் இந்தியப் படைகள் முறையாக சித்திரவதை நடத்துவது பற்றி எழுதப்பட்டுள்ளதையும் படிக்க ஆரம்பித்தார்

இவ்விதத்தில் அம்பலமாகுதல் காலவரையறையின்றி நடக்கும் என்று தெரிவித்த அவர் ABC யிடம் விக்கிலீக்ஸ் தளத்தில் 250,000 இரகசியத் தகவல் கேபிள்களில் 2,000 மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

வாஷிங்டனில் செவ்வாயன்று காங்கிரஸ் குழுக் கூட்டம் ஒன்றில், அரை டஜன் சட்ட வல்லுனர்களும் குடியுரிமைவாதிகளும் அசாங்கே உளவுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுவது முடியாதது என்றும் இதற்குக் காரணம் எந்த மக்கள் நடுவர் மன்றமும் இதுவரை எந்தச் செய்தியாளரையும் அல்லது இரகசியத் தகவல் பெற்றவரையும் அச்சட்ட விதிகளின்கீழ் தண்டித்ததில்லை என்றனர்.

காங்கிரஸ் உறுப்பினரான ஜோன் கோன்யர்ஸ், மன்ற நீதித்துறைக் குழுவின் தலைவராகச் செயல்பட்டு இப்பொழுது நீங்கி இருப்பவர், குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். வரவிருக்கும் காங்கிஸ் உளவுத் தடுப்புச் சட்டத்தை மறு பரிசீலனையை உறுதியாகச் செய்யும் என்றும் விக்கிலீக்ஸை குற்றத்திற்கு உட்படுத்துவதற்கு ஒரு புதிய தளத்தை அது அமைக்கும் என்றும் கூறினார்.

அதே தினத்தில் அமெரிக்கத் தலைநகரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் 1971ல் நியூ யோர்க் டைம்ஸுக்குக் கசிய விட்டிருந்த டானியல் எல்ஸ்பேர்க், அசான்ஜ் மற்றும் பிராட்லி மானிங்கிற்கு பெரும் ஆதரவு கொடுத்துப் பேசினார். இப்பொழுது 79 வயதான எல்ஸ்பேர்க் மானிங்கை “ஒரு சகோதரர்” என்று அழைத்தார். அவர் விக்கிலீக்ஸுக்கு ஆவணங்களை கொடுத்திருந்தால் “ஒரு பெரிய பாராட்டத்தக்க செயலைத்தான் செய்தார்” என்றும் கூறினார்.

மானிங் மற்றும் அசாங்கேயின் செயல்கள் ஒன்றும் டைம்ஸானது பென்டகன் ஆவணங்களை வெளியிட்டது அல்லது வாஷிங்டன் போஸ்ட் வாட்டர்கேட் சதியை அம்பலமாக்கியதை விட குற்றச்சாட்டுக்கள் நடத்தி விசாரணை செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com