Sunday, December 12, 2010

தேசிய கீதம் இனி சிங்களத்தில் மாத்திரம் பாடப்படும்!

இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என கடந்த புதன்கிழமை அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை இன்று ‘National Anthem only in Sinhala; Tamil version out’ என்ற தலைப்பில்செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் உத்தியோகபூர்வமான மற்றும் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது.

‘சண்டே டைம்ஸ்’ அதன் மேலதிக செய்தியில்;

தற்போது இலங்கையின் தேசிய கீதத்தில் சிங்களத்தில் வரும் ‘சிறிலங்கா மாதா’ என்ற சொல் வடக்கு – கிழக்கு தவிர்ந்த அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல்.

அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானமானது மிக நீண்ட ஒரு விவாதத்தின் பின் எடுக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர்களை நோக்கி கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் “வேறு எந்த நாட்டிலும் தேசிய கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை” என கூறினார்.

அத்துடன் அவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமது ஆட்சிக்காலத்தில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது வெளிநடப்பு செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டில் இரண்டு தேசிய கீதம் இருக்கமுடியாது, இது கட்டாயம் தீர்வு காணப்படவேண்டும், இலங்கை ஒரேநாடு என்ற அடிப்படையில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிபிட்டார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு தமது ஆதரவை வெளியிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அயல் நாடான இந்தியாவில் 300 மேற்பட்ட மொழிகள் பாவனையில் உள்ள போதும் தேசிய கீதம் ஹிந்தியில் மாத்திரமே உள்ளது என கூறினார்.

எனினும் அமைச்சர் வாசுதேச நாணயக்கார மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டனர், எனினும் அமைச்சரவை ஜனாதிபதியின் யோசனையை ஏற்றுக் கொண்டது.

சிங்கள தேசிய கீதத்தை மாத்திரம் பாட ஆணை பிறப்பிக்கும் பொதுக்கட்டளை பொது நிர்வாக அமைச்சினால் அனுப்பப்படவுள்ளது.

1 comments :

Anonymous ,  December 13, 2010 at 7:32 AM  

மும்மொழிக் கொள்கை

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com