இறுதி வலி
பூமித்தாய்க்கு
பிரசவ வேதனை
பிறப்புத்தேதி குறித்தாயிற்று
ஜனவரி 2011
முதல் மழைத்துளி.
கருக்கலைப்பு செய்துவிட்ட கர்வம்
பலமுறை சிதைக்கப்பட்ட கர்ப்பம்
பலமுறை கலைக்கப்பட்ட கனவு
இம்முறை
நல்லதே பிறக்கட்டும்.
பூமித்தாய் மசக்கை சொன்னாள்:
இன்றைய மனிதனின்
கந்தகப்பொறாமையால் சூடாகும்
சூரியனின் வெக்கைக்குச் சந்தணம் பூசப்
புத்தம் புதுப் புன்னகைஆசான்
பிறக்க வேண்டும்.
இறுதி வலி
பூமித்தாய்க்கு
பிரசவ வேதனை
பிறப்புத்தேதி குறித்தாயிற்று
ஜனவரி 2011
முதல் மழைத்துளி.
கருக்கலைப்பு செய்துவிட்ட கர்வம்
பலமுறை சிதைக்கப்பட்ட கர்ப்பம்
பலமுறை கலைக்கப்பட்ட கனவு
இம்முறை
நல்லதே பிறக்கட்டும்.
பூமித்தாய் மசக்கை சொன்னாள்:
இன்றைய மனிதனின்
கந்தகப்பொறாமையால் சூடாகும்
சூரியனின் வெக்கைக்குச் சந்தணம் பூசப்
புத்தம் புதுப் புன்னகைஆசான்
பிறக்க வேண்டும்.
சிறு சிறு இனங்களானது நம் சமூகம்
கத்தியோடும் இரத்தத்தோடும் மறுபளடி
அறுவை நிகழ்ந்து குழந்தை பிறந்தால்
பிரசவம் குறைப்பிரசவம்தான்
எனில்
வருங்காலம் வெறுங்காலம்தான்.
அடுத்த வீடு மறையும்
அடுத்த நாடும் மறையும்
அடுத்த மனிதனும் மறையட்டுமென்று
ஒருவருக்கொருவர் தேதி குறிப்பர்
இறுதிவலி இதுதான்
அமைதியான இயற்கைப்பிரசவம்
நிகழவேண்டும்
இல்லையெனில்
வலி தொலையும்
வழியும் தொலையும்
பூமி
மானுடத்தின் வீடாக வேண்டும்
பிரசவத் திடத்தோடு
பூமித்தாய்
பிறப்புஅறைக்குப் போனாள்
இப்போது
ஜனிப்பது எதுவோ...?
பிசைந்த கையோடு
வெளியே காலம்!!
சவூதியிலிருந்து
இனியவன் இஸாறுதீன்;
0 comments :
Post a Comment