வெள்ளைக்கொடி வழக்கினை வீடியோவின் முலப்பிரதியின்றி முன்னெடுக்க முடியுமாம்.
சரணடைந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படையதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தாக வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கிற்கு சாட்சியமாக அவர் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் பேசிய விடயத்தினை அரசாங்கம் பதிவு செய்துள்ளது. குறிப்பிட்ட பேச்சினை அததெரண ஊடகம் பிரசுரித்திருந்த நிலையில் அததெரணவிற்கு அந்நிகழ்வின் முழு மூலப்பிரதியை நீதிமன்றுக்கு சமர்பிக்குமாறு மன்று உத்தரவிட்டது. சம்பவத்தின் முழுப்பிரதி தம்மிடமில்லை என அததெரண ஊடகம் மன்றக்கு தெரியப்படுத்தியது. இந்நிலையில் முழுப்பிரதியில்லாமல் குறிப்பிட்ட பேச்சினை சாட்சியமாக பெற்றுக்கொள்ள முடியுமா என ஆராய்ந்த நீதிபதிகள் குளாம், ஆம் முழுப்பிரதியில்லாமல் பேச்சின் பகுதியினை சாட்சியமாக ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் குழாமின் இம்முடிவுக்கு ஜெனரல் பொன்சேகா தரப்பு வழங்கறிஞர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment