ஐ.நா வின் விசாரணைகுழுவை நாட்டினுள் அனுமதிப்பது தொடர்பில் அரசினுள் முரண்பாடு.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணைசெய்து ஐ.நா வின் பொதுச் செயலாளருக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை நாட்டினுள் அனுமதிப்பது தொடர்பாக இலங்கை பரிசீலிக்கும் என அறிவித்துள்ளது. மேற்படி குழுவை எந்த காலகட்டத்திலும் இலங்கையினுள் அனுமதிக்கமாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துவந்த நிலையில் ஐ.நா உத்தியோகபூர்வ வேண்டுதலை விடுத்தால் அது பரிசீலிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசின் இவ்வறிவிப்பினை முற்றாக எதிர்த்துள்ள அமைச்சர் விமல்வீரவன்ச, அரசு எந்த வகையிலும் மேற்படி குழுவை இலங்கையினுள் அனுமதிக்க கூடாது எனவும், அவ்வாறு அவர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ள மக்கள் ஒன்று திரளவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கையிலே செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரசிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் இங்குள்ள மக்களை பொய்சாட்சிகளுக்காக தயார்படுத்தி தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர் எனவும் தெரிவித்துள்ளார்:
இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு எதிராக அமைச்சர் வீரவன்ச எதிர்ப்பு அலையை தோற்றுவித்துள்ளமை மிகவும் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது.
0 comments :
Post a Comment