சீமான் வீடுதலையாகின்றார்.
இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அந்த வழக்கில் அரசு ஆஜராகி வாதாடவில்லை. கடைசியாக டிசம்பர் 6-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜேம்ஸ் பீட்டரின் வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கு மீதான விசாரணையை வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அதன் பிரதியை நீதிபதிகளிடம் வழங்கினார்.
அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, சீமான் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளுக்கு மாற்றும் வகையில், தலைமை நீதிபதியிடம் வழக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனு மீதான வழக்கு விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதாடினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.
2 comments :
ஈழத்து தமிழ் மக்களின் துன்பத்திலும், சோகத்திலும் அரசியல் நடத்தும் பரதேசி இனிமேலும் மக்களை ஏமாற்றமுடியாது.
இதுவரைக்கும் இந்த பரதேசி அல்லல்படும் ஈழத்து தமிழருக்கு ஒரு பைசாவும் கொடுத்ததில்லை.
You may direct a film.cinema is not politics.You.There is nothing to direct in Srilanka's politics.
Post a Comment