லசந்த விக்கிரமதுங்கவின் கொலை விசாரணை ரிஐடி க்கு மாற்றப்படுகின்றதாம்.
தெஹிவல பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைவிசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது ரிஐடி எனப்படும் பயங்கரவாத பிரிவினருக்கு இன்றிலிருந்து மாற்றப்படுகின்றது. குறிப்பிட்ட கொலையுடன் தொடர்பு பட்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகட்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இம்மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment