Monday, December 13, 2010

மக்கள் ஜனநாயக முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் தீர்மானம்.

இலங்கையில் இன்றிருக்கும் அரசியல் சமூக,பொருளாதாச் சூழ் நிலைகளை மிக ஆழமாகவும், பரந்துபட்ட ரீதியிலும், முழுமையாகவும், வரலாற்று ரீதியாகவும், இயக்கவியல் ரீதியாகவும்,அகவயப்பட்ட விருப்பு வெறுப்புகளை கவனத்திலெடுக்காத புறவயப்பட்ட ரீதியாகவும், நடந்தேறியிருக்கும் மாற்றங்களைனைத்தையும் கூர்மையான கவனத்திலெடுத்த எமது மத்திய குழு முழு, தேசத்தையும், அனைத்து மக்களின் சமூக வாழ்க்கையையும் அச்சுறுத்தும், எதிர் வந்து கொண்டிருக்கும்; சமூக, அரசியல், பொருளாதார பிரளயத்திற்கெதிராக போராடியே ஆக வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையைப் பற்றி எமது அங்கத்தவர்களுக்கும், தேச மக்களுக்கும் கரிசனையுடன் ஞாபகப்படுத்துகின்றது.

ஏறக்குறைய கடந்த 30 வருடகாலமாக இந்த நாட்டில் வாழும் பிரதான இனங்கள் மத்தியில் ஏற்பட்ட தேசிய இனப்பிரச்சனையை, , இந்த நாட்டினை ஆண்ட முதலாளித்துவ சக்திகளினாலும, அந்தந் சக்திகளுக்குத் நேரடியாகவும் மறை முகமாகவும் துணைபோன சிங்கள,தமிழ் இனங்களின் நிலப் பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரின் குறுகிய தேசியவாத சக்திகளாலும, தேசத்தின் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கடைப்பிடித்த உபாயங்களால் அந்தப் பிரச்சனையையே தேசத்தின்; சமூக வளர்சியின் பிரதான முரண்பாடாக மாற்றி, சுமூகமாக தீர்த்தாக வேண்டிய இனப்பிரச்சனையை தாம் அதிகாரத்திற்கு வரவும், தாம் பெற்றிருந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் தேவையான ஒரு காரணியாகவும் மாற்றின.

தேசிய முதலாளித்தவ சக்திகளின்; பிரதான இரண்டு கட்சிகள்; மூலமாகவும்அவற்றிற்கு துணை போன மற்ற சக்திகள் மூலமாகவும் அந்தச்சக்திகள் கடைப்பிடித்த அந்த பிரதான உபாயற்கனின் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாய் .பாரிய உயிர் ,உடமைச் சேதங்களை சந்திக்க நேர்ந்து தேசத்தின் சமூகத் பொருளாதார வளர்ச்சி பாரதூரமாகப் பாதிக்கப்பட்டு தேசத்தின். சௌஜன்ய வாழ்வு மிக மோசமாக நாசமாகி விட்டது. தேசத்தை ஆளும் வர்கத்தினர் யுத்தம் முடிந்து நிலை உருவாகிவிட்டபோதினிலும்.யுத்தத்தை தோற்றுவித்த காரணிகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கு காத்திரமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல்,பிரச்சனைத் தீர்க்கத் தயாராகாமல் இந்தப் பிரச்சனை சம்பந்தமாக பழைய உபாயங்களையே கடைப்பிடிக்கின்றனர்.

யுத்தம் முடிந்த இந்தத் தருவாயில்,அதிகாரத்தில் இருப்போரினராலும் அவர்களுக்குத் துணை
போகும் சக்கிகளாலும் நடக்கும் தற்போதைய நிர்வாகத்தின் காரணமாய், தேசத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும், பெரும்பான்மையான மக்கள் மத்தியில் தலை விரித்தாடும் வறுமையும் ,வேலையில்லாத் திண்டாடடமும்,பிரதான இனங்களான சிங்கள மக்கள் மத்தியிலும்,தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், ஏற்பட்ட இவ்வளவு இழப்புகளுக்கு மத்தியிலும இன்னமும் ஆறாமலிருக்கும் காயங்களும் நம்பிக்கையின்மையும், சொந்தத் தேசத்திற்குள்ளேயே தொடர்ந்து இலட்சக்கணக்கான சிறுபான்மை மக்கள் அகதிகளாக வாழும் நிலைமையும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு எந்த விதமான நிபந்தனையுமின்று மீள் குடியேறவும் அவர்கள் இழந்த வாழ்க்கையை அவர்கள் விரும்பிய ரீதியில் எநத விதமான நிபந்தனைகளுமற்று மீளக் கட்டியெழுப்பவும் அவர்களுக்கிருக்கும் தார்மீக உரிமையை நடைமுறைப்படுத்தவும் தேவையபன எதுவும் முறையாகவும்,சரியாகவும் செய்யப்படாத காரணங்களினால் தசாப்தங்களாக நீண்டு கொண்டிருக்கும் அவர்களது அவல வாழ்க்கை பரிதாபத்துக்குரிய ரீதியில் தடங்களின்றித் தொடர்கின்றதோடு முழுத் தேசமும் நாசமாகிக்
கொண்டிருக்கின்றது.

தற்பொது தாங்கள்தாம் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தமபட்டமடித்தக கொண்டிருக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் பேசும்; மக்களின் யாராலும்; பறித்தெடுக்கப்பட முடியாததும் அவர்களே விரும்பினாலும் அவர்களாலேயே விட்டுக்கொடுக்க முடியாததமான அவர்களது மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், சந்தை போன்றனவற்றை நிபந்தனையற்ற ரீதியில் வளர்தெடுப்பது உட்பட்ட அனைத்து தேசிய ஜனநாக உரிமைகளையும் ஐக்கியுப்பட்ட இலங்கைக்குள் ஸ்தாபித்து, உறுதிப்படுத்துவது என்பதற்கான உபாயங்களைப் பற்றியோ, அதை நடைமுறைப்படுத்டக் கூடிய போராட்ட வியூகங்களைப் பற்றியோ, தேவையான ஸ்தாபன அமைப்பைப் பற்றியோ தெளிவில்லாமல், போலியான ஓரு 'ஏகப்பிரதிநிதி' என்றமாயைக்குள் சிக்கிக்கொண்டு, இலங்கைக்குள்ளும் ,இலங்கையைச் சுற்றியும் உள்ள கனிப் பொருள் வளங்களை அம்மணமான சுரண்டலுக்கு உட்புடுத்தி பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடாவையும், வங்காள விரி குடாவையும் தனது கட்டுப்பாட்டக்குள் வைத்துக்கொள்ள எத்தனிக்கும் மேற்குலக ஏகாதிபத்திய முதலாளித்தவத்தையும் அதன் பிராந்திய ஏவல் நாயான இந்திய ஆளும் வர்க்கத்தையும் நம்பி அதுவே தனது அரசியல் செல்வாக்கிற்கு போஷணையையும் பாதுகாப்பையும் தரும் என்று நம்பி பாராளுமன்ற ஆசனங்கள் தரும் சொகுசுகளிலும், செல்வாக்கிலும் காலம் கடத்திக கொண்டிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் வீரத்தையும்,விவேகத்ழதயும்,தேசிய ரீதியாகவும்,சர்வ தேசிய ரீதியாகவும் விலைபேசி விற்ற எல்.டி.டி.யீ பயங்கரவாதிகளின் ஆணைகளுக்கு பயந்து, அடிபணிந்து, முள்ளிய வாய்க்கால் வழியாக நந்திக்கடலில் தமிழ் பேசும மக்களின் ஆரோக்கியமான தேசிய நலன்களை குற்றுயிருடன் மூழ்கடித்த கைங்கர்யம் இவர்களுக்கே உரிய சுய சிந்தனையற்றதன்மையின் காரணமாய் பரிணமிக்கும் இவர்களுடைய அரசியல் மலட்டத் தனத்தையும். எல்.டி.டி யினருக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அமைதி வாழ்க்கைகுத் திரும்புமாறு உபதேசம் செய்யபட பயந்த அரசியல் பேடித்தனத்தையுமே சாரும்.

அரச செல்வாக்குடனும், அரச பாதுகாப்புடனும், இலங்கை அரசின் நிகழ்சி நிரலுக்கு இசைவாய் ஒரு காலையும், அதே நேரத்தில் கோடை காலத்த}க்கத்தில் இருக்கும் குறுகிய முதலாளித்துவ தமிழ் தேசிய வாதத்தில் இன்னொரு காலையும் வைத்துக் கொண்டு காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றன மற்ற உதிரி தமிழ் அரசியல் கட்சிகள். 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சீ ' என்ற சுலோகத்துடன் அரசியல் வலம் வந்தவர்ரள் யாழ் மாநகர சபைக்கு அதிகாரப் பரவலாகக்ச் சுருக்கத்தை மௌனகமாக ஏற்றுக் கொண்டு, அண்மையில் யாழ் நகர சபையின் நிர்வாகத்ததுக்குட்பட்ட யாழ் நூலகத்தில் பெரும்பாண்மைச் சமூகத்தைச் சேர்ந்தோரின் அடாவடித்தனத்தையும், அத்து மீறல்களையும பயத்துடன் சகித்து அந்தச் சம்பவங்கள் அங்கு நடக்கவேயில்லை என மழுப்பிச் சமாளிக்கும் அளவிற்கு மகிந்த விசுவாசம் அந்தக் கட்சிகள் மத்தியில் வேரூன்றியிருக்கின்றது.

வேத மந்திரங்களை அரசியல் சுலோகங்களாக்கிக் கொண்டு அரசியலில் பிரவேசித்து நாளடைவில் ஆளும் கட்சிகளின் கைப்பிள்ளைகளாகி பதவிக்காகவும் அது தரும் சொகுசுகளுக்காகவும் பல கட்சிகளாக முஸ்லிம் முதலாளி வர்க்கத்தினதும், வியாபாரிகளினதும், சீதனச் சந்தையில் விலை போவதற்காகவே கல்வி கற்ற புத்தி ஜீவிகளினதும் நலன்களுக்காக மட்டுமே எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசியல் நடத்துகினறன. அதிகாரத்திலிருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம அகதிகளின். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க அஞ்சி, முஸ்லிம் நாடுகளின் அரசுகளிடம் கெஞ்ச வேண்டிய பரிதாபம் ஏற்படும் அளவிற்கு கையாலாகாத்தனம் முஸ்லிம் தலைமையிடம் எஞசியிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியொன்றைத தேடிக்கொடுத்து அவர்தம் தனித்துவம் பேணுவோமென்ற கோஷத்தை முன் வைத்து அரசியலுக்க வந்த இவர்கள் அப்பாவி ஏழை முஸ்லிம் சாமான்யர்களின் நலன்களை மறந்து கட்சித் தலைமைகளின் சொந்த நலன்களுக்காகவே அரசியல் நடத்துகின்றன முஸ்லிம் கட்சிகள். இந்தத் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம்களுக்காகவே நாம் கட்சி மாறுகின்றோம் என்று கூறிக்கொண்டு அரசின் ஒட்டுமொத்தமான ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளையும் ஆதரிப்பதன் மூலம் துங்கக் கூண்டுமளில் அடைபட்டுக்கொண்ட விலங்குகள் போல சோரம் போன அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையான தொழிலாளி வர்க்கத்தினரை தொழிற் சங்க அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் மலையக கட்சிகள் காந்திக குல்லாயைப் போட்டுக்கொண்டு
கள்ளுக் கடையில் இருப்பவர்களைப்போல, மலையக வியாபார முதலாளி வர்கத்தினரின் நலன்களுக்காகவே அரசியல் நடத்துகின்றனர்.

அண்மையில் அரசினால் நிறை வேற்றப்பட்ட 18வது அரசியல் சாசன திருத்தச் சட்ட மூலத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய இந்த சிறுபானிமைக் கட்சிகள் 'மாநில சுயாட்சி', 'முஸ்லிம் மாகாண சபை', 'மலையக மக்களுக்கும் அதிகாரப் பகிர்வு' போன்ற கோரிக்கைகளை குழி தோண்டிப் புதைத்து இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் இந்த அரசியல் சாசன திருத்தத்திற்கு வாக்களித்து அரசுக்கு விசுவாசம தெரிவித்துக் கொண்டவர்கள. அகதிகளுக்குக்கூட ஒழுங்கான முறையில் தேவைப்புடும் வசதிகளுக்காக இலங்கை அரசை நிர்பந்திக்காமல் அண்டைய இந்ரியாவையும், மேற்குலக நாடுகளையும், தூரத்து மஸ்லிம நாடுகளையும் கெஞ்ச வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மையின அரசியல் கட்சித் தலைவர்கள்.

கடந்த பத்தாண்டுகளாக,சோஷலிசத்துக்கான குறுக்கு வழிகளைத் தேடிக்கொண்டு அதற்கு
போஷாக்குடையது கிராமிய, குறு நகர்ப்புற, குறுகிய, பிற்போக்கு, தீவிர சிங்கள தேசியமே என்று கணித்து அதற்கான உபாயங்ளை வகுத்து பகிரங்கமாக வர்க்க எதிரியான முதலாளித்துவ அரசின் சுரண்டலுக்குத் துணை போய் வர்க்க எதிரியின் அடக்குமுறை இயந்திரங்களையும், சட்டங்னளையும் பலப்படுத்திய பெருமை ஜே.வி.பி யைச் சாரும்.அந்த அடக்குமுறை இயந்திரங்களையும், சட்டங்களையுமே இன்று இந்த அரசு ஜே.வி.பி.யை அடக்கவும், தேச மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கவும் பாவிக்கின்றது. அரசுக்கு துணையாயிருக்கும் பழைய, வைதீக இடதுசாரிகள், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த உலக சோஷலிச முகாமின் மறைவிற்குப் பின்னர், மார்சிய லெனினிய சித்தாந்தத்தில் நம்பிக்கை இழந்து வர்க்கப் போராட்டத்தை மறந்நதோடு மட்டுமில்லாமல் உப்புச் சப்பற்ந அரசின் சிந்தனைகளுக்கு வர்க்கப் போராட்டத்தை காட்டிக் கொடுத்துக்கொண்ட வர்க்க எதிரிக்களுக்குதுணைபோகின்றார்கள். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியேர, மஹிந்த ராஜபகஷவின் தலைமையிலுள்ள முதலாளித்துவ ஆட்சியின் அடக்குமுறை இயநதிரங்களில் ஒன்றான சிறைச்சாலைகளுககுப் பொறுப்பான அமைச்சைப் பொறுப்பேற்குமளவிற்கு கித்தாந் ரீதியாக சோரம்போய கட்சிக்குள் பாராளுமன்ற பிரநிதித்துவ மோகத்தை ஆழமாகவும், பரவலாகவும் வளர்த்து, இந்த நாட்டின் ஓரு வரலாற்று முக்கியத்துவம் வாய்நத பாட்டாளி வர்க்கக கட்சியொன்றின் முகவரியையே இல்லாமலாக்கிவிட்டது.

இந்தச் சூழ் நிலைகிலும் JVP பாடம் பயின்றதாகத் தெரியவில்லை இன்றைய ஜனநாயக
மீட்சிப் போராட்டத்திற்கு சிங்கள மக்களை அணி திரட்ட யத்த வற்றியையும்,அந்த வெற்றியின்
நாயகளையும், அவருக்கு இன்றைய அரசினால் இழைக்கப்பட்ட அநீதிகளையுமே பெருமளவில்
பிரச்சாரப்படுத்துகின்றனர். இந்த அரசின் அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நவ காலனியாதிகக் உபாயமான உலகமயமாக்களுக்கும், எதிராகவும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும, அனைத்து உழைக்கும் மக்களையும, சாமான்ய அன்றாடம் காய்சிகளையும் ஒன்று திரட்டி, சமூக முன்னேற்றத்திற்கான செயலூக்கம் மிக்க ஸ்தாபன அமைப்பை இன, மத பேதமின்றி அனைத்து ஜனநாயக, இடதுசாரி, மாற்றுச் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைத்து உருவாக்க எத்தனிக்காமல் இன்னமும் கிராமிய, குறு நகர்புற சிங்கள குட்டி முதலாளித்துவ சக்கிகளையே நம்பிக் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாகவே ஜனசாயக மீட்புப் போராட்டம் உத்வேகமடைவது தாமதப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் எற்பட்டிருக்கும் உணவு, நிதி. எரிபொருள் பற்றாக்குறைகளுக்கு மத்தயில் மோசமான ரீதியில் உருவாகிக் கொண்டிருக்கும் சூழல் மாற்றங்களினால் உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் காரணத்தினாலும் முதலாளித்துவ வளர்சியை கடைப்பிடிக்கும் அனைத்து நாடுகளும் தமது தொடர்ந்த வளர்சியை உறுதிப்படுத்துவதற்காக, தனது உலகமயமாக்கப்பட்ட சுரண்டலக்காக கனிப் பொருட்களை மலிவாக பெறக் கூடிய சந்தைகளையும், தனது உற்பத்திப் பண்டங்களை விற்ற பாரிய இலாபங்கள் தேடுவதற்குமான போட்டி உலகளாவிய ரீதியில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் தோன்றியிருக்கின்றது. அந் நாடுகளில் வேலையில்லாத்
திண்டாட்டம் அதிகரித்திருப்பதுடன் மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரச நிதி சேவைகளும் தொடர்ந்துகட்டுப்படுத்தபபடுகின்றத. இதன் காரணமாய் முதலாளித்துவ வளர்ச்சியைக் கமைடப்பிடிக்கும் நாடுகளில் பாரிய சமூக அமைதியின்மைகள் தோன்றி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இது வரை காலமய் தாம் பல நூற்றாண்டுகாலமாக காலனியாதிககதிற்கு உட்புடுத்தி, பின்னர நவ காலனியாதிக்க சுரண்டலைத் தொடர்ந்து, நவீன
உலகமயமாக்கலின் மூலமும், சர்வ தேச நாணய நிதி மூலமாயும், உலக வங்கியின் மூலமாயும் வளர்சியடையும் நாடுகளையும் எமது போன்ற ஊன வளர்ச்சியடைந்த நாடுகளையும், உதவி, கொடை என்ற பெயர்களில் புது விதமான கேட்பார், பார்ப்பாரற்ற சுரண்டல்கள மூலமாயக் கொள்ளையடித்து வந்த வளர்ச்சியடைந்த முதலாளழத்துவ நாடுகளில் ஏறபட்டருக்கும் பொருளாதார மந்தம் காரணமாய், சர்வதேச நிதி நிருவனங்கள். ஏழை நாடுகளுக்கு நிதியுதவி செய்வதைக் குறைக்குமாறும் ஆலோசனை கூறியுள்ளன.

நாம் வாழும் தெற்காசியப் பிராந்திலும், கிழக்காசிய பிராந்தியத்திலும, அதை அண்மித்த
பசுபிக் பிராந்தியத்திலும உலக முதலாளித்துவம் இதுவரை ஆழமாகவும், மிகப் பரவலாகவும் கை வைத்துச் சுரண்டாத நில,நீரர்ப் பகுதிகளில் பெருமளவில் இருக்கும் அரி மண் மூலகங்ஙளிலும் மற்றும் கனிப்பொருள் வளங்களிலும் வளர்ச்சியடைந்த பழைய ஏகாதிபத்தியத்தினதும, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய போர்வையை போர்த்திக் கொண்டாகவேண்டிய நிர்ப்பந்தத்துககுள்ளாகியிருக்கும் நாடுகளினதும் கவனம் திரும்பியிருப்பதனால் இந்தப் பிரதேசத்தில் கேந்திர முக்கியத்தவமான இலங்கைத் தீவு, உலக சந்தையை தமக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்காக பிரித்துக் கொள்ள எத்தனிக்கும் போட்டியில் கூர்மையான கவனத்தை ஈர்திருப்பதன் காரணமாயயும்,அந்த ஏகாதிபத்திய சக்கிகளையே நாட்டின் நிர்வாகச் செலவுகளுக்கும், சாட்டின் பொருளாதார ஊன வளர்ச்சிக்கும் பெருமளவில நம்பியிரக்கும் இலங்கை அரசின் நிர்வாகம், ஊழல்களுக்கும், வீண் விரயங்களுக்கும், பாரிய நிதி மேபசடிகளுக்கும், தவறான முகாமைத்துவ முகாமைத்துவத்திற்கும்த்திற்கும் உட்படுத்தப்பட்டிருப்பதனால் இந்த நாட்டில் வாழும் லட்சோபலட்சம் ஏழைப் பாட்டாளி மக்களின் அனறாடைய வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கின்றது.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னரான அமைதி நிலைமை உண்மையான அமைதிதானா ? என்ற கேள்வி தோன்றுமளவிற்கு இங்கு வாழ்கின்ற பிரதான இனங்கள் மத்தியில் யுத்தம் தோன்றக் காரணமாயிருந்த காரணிகள் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கின்றன என்பதோடுல்லாமல். தீர்ப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும் ஆரம்பிகடகப்படாமல் ஆறாத பழைய புண்கள் மீண்டும் கிளறப்படக்கூடிய வாய்ப்புக்களே அதிகரித்தும் காணப்படுகின்றது. குறுகிய சிங்கள தேசியவாதம் பல வெளிநாடுகளினதும், விசேடமாக இலங்கைப் பிரச்சனையை வைத்துக் கொண்டு அரசியல் இலாபம் தேடும் இந்தியாவின் மத்திய, தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளின் உதவியுடன் இலங்கையின் பாதுகாப்புப் படைகள் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் மமதையனால் நாட்டின் பொது நிர்வாகம் நிலை தடுமாறிக கொண்டிருக்கின்றது. பிரச்சனை தீர்க்கப்படாமல் சாக்குப் போக்குச் சொல்லப்பட்டு தீர்வு தாமதமாகிக கொணடிருக்கின்றது.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வாழும் அனைத்து மக்களும் சம சந்தர்ப்பங்களுடன் தத்தம் மொழி,கலாச்சாரம் ஆதியனவற்றை பண்டைப் பாரம்பரியங்களுடனும் அவற்றை நவீன மயப்படுத்தி வளர்க்கவும் அனைத்து இனங்களுக்கும் இருக்கும் உரிதைகள் ஸ்தாபிக்கப்பட்டு, உறுதிப்படுத்துபபட்டு, தொடரவேண்டிய வளர்ச்சி சட்ட ரிதியாக உறுதிப்படுத்துப்புட்டு
ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும்.இதுவொன்றே இனி வரும் காலங்களில் தேசிய ஐக்கியத்தை ஊருவாக்கக் கூடிய தேசிய நல்லிணக்கத்தின் முதல் அடிப்படையாகும். இந்த நடவடிக்கையொன்றே நாடடின் சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தக் கூடியதும் அதற்கு அவசியமானதுமானதுமான சகல இன மக்களும் பேதங்களை மறந்து வாழக் கூடிய ஆரோக்கியமான சமாதான சூழல் உருவாகும்.

J.R.ஜயவர்தனாவின் ஆட்சியில் அவர் கடைப்பிடித்த அமெரிக்க ஏகாதிபத்திய சார்புப்
போங்கினால் இந்தியாவினதும், எமது பிராந்தியத்தினதும் பாதுகாப்பு அச்சுறுத்தப்பட்டதைத்
தொடர்ந்து இந்தியா தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கிய ஆதரவின் காரணமாய், இந்திய அரசியல் சாசனத்தின் மிக மோசமான பிரதி ஒன்றான இலங்கை அரசியல் சாதசனத்தின் 13வது திருத்தச் சட்ட மூலம் இந்த நாட்டின். இனப் பிரச்சனைக்குத் தீர்வாக கொண்டு வரப்பட்டது.

கடந்த இரண்டு தசாப்பங்களுக்கு மேல் அதை ஓழுங்காக நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் அதில் வாக்களிக்கப்பட்ட அதிகாரப் பரவலாகல் கூட நடைபெறாமல் மாகாண சபைசள் நிர்வாகம் நாடு தழுவிய ரீதியில் தேவையற்ற செலவை கொண்டு வரும் வெள்ளையானையாகவே மாறிவிட்டது. இந்த நிலைமைகளை மாற்றி அரசியல் சாகனத்தை நடைமறைப்படுத்துவோம் என்று சத்தியப் பிரமாணம் செய்த ஜனாதிபதிகள் அனைவரும் 13வது அரசியல் சாசன சட்டத் திருத்த மூலத்துடன் அரசியல் சாசனத்தின் தமக்கு வேண்டாததும், விருப்பமில்லாததும், செல்வாக்கிற்கு தடையபனதுமான பகுதிகளை நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்துக் கொண்டதனால் குறுகிய சிங்கள தேசிய வாதத்தின் செல்வாக்கு அதிகரித்ததுடன் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உதவியுளுடன் ஏற்பட்ட யுத்த வெற்றியின் காரணமாய் தமிழ் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகள் கேட்பார் பார்ப்பாரற்று வித்துவக் கலந்தரையாடலுக்கு மட்டும மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது.

இந்த நாட்டில் இன,மத பேதமற்ற தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உழைக்கும் மக்களும் அதிகாரத்திற்கு வந்து விஞ்ஞான பூர்வமாய் இந்த நாட்டின் தேசிய இனப பிரச்சனை தீர்கப்பட முன்னர் தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில அச்சங்கள் ஏதுமின்றி சமத்துவத்தடன் கணிக்கப்பட்டு பாதுகாப்புடன் வாழ வழி சமைப்பது நாகரீகமான அரசியல் சக்திகளின் கடமையாகும்.

இந்த நாட்டில் இதுவரை ஓடிய குருதியின் நாற்றம் நீங்கு முன்னர், சொந்தங்களையும், பந்தங்களையும் வாழ்வாதாரங்களையும இழந்த மக்களின் ஓலங்கள ஓயுமுன்னர அரசு வெற்றியின் களிப்பை சிங்கள மக்களுக்கு தொடர்ந்து இடைவிடாமல் ஞாபகப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ரீதியில் கடந்த ஒரு வருடமாகவே கொண்டாட்டஙகளில இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வீண் விரயம் மட்டுடமல்ல, தேசிய நல்லிணக்கத்ததை தாமதப்படுத்தி, அந்தக் கால தாமதத்தில் தேசிய ஐக்கியம் உருவாகக் கூடிய சாத்தியங்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கக் கூடிய குறுகிய சிங்ஙள தேசிய வாதத்தின ஆட்சியும், வீச்சும் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை, சில சமயங்களில் அரசியல் அதிகாரத்தின் மறைமுகமான ஒத்துழுப்புடனும், உதாசீனமான பாராமுகத்துடனும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

ஜனநாயகத்திலும், நல்லாட்சியிலும், தொழிலாளர்களின் பிரகடனத்தை உருவாக்க எத்தனித்த
நல்லெண்ணத்திலும், உலகளாவிய முற்போக்குச் சக்திகளுடன் நம்பிக்கை கொண்டவராகவும்
இருந்த ஜனாதிபதியவர்களால் 1977ல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த திறந்த கதவுப் பொருனாதாரத்தைத் தவிர தேசிய நலன்களை உறுதியுடன் பாதுகாக்கும் ஒரு மாற்றுப் பொருளாதார வேலைத்திட்ட்த்தைக் கடைப்பிடிக்க முடியவில்லை. இவருக்கு முன்பிருந்த சந்திரிக்காவாலும் முடியவில்லை. ஏனென்றால் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசுகள் அனைத்தம் காலனியாதிக்க, நவ காலனியாதிக்க பொருளாதார வளர்சிக்கு மாற்றமாக தேசிய பொருளாதாரத்தை சுயமான ஒரு உறுதியான அடிபடபடையில் ஸ்தாபித்து வளர்த்தெடுக்க காத்திரமான திட்டங்களை நடைமுறைப்படுத்த 1956லும் மீண்டும் 1970 களிலும் இந்த நாட்டின் முற்போக்குச் சக்திகளுக்கு ஆட்சி அதிகாரத்திலீருந்த ஏகாதிபத்திய சார்பு முதலாளி வர்க்கமும், தேசிய முதலாளி வர்க்கமும் முட்டுக்கட்டை போட்டன. சுதந்திரத்திற்குப் பின்னரான அரசுகள் அனைத்தும் தமது நிர்வாகத்திலே தேசத்தின் பாரிய பொருளாதார பிரச்சனைகள் தீர்க்கப்படாது நிர்வாகம் சீரழியும் போது அரசில் தொடர்ந்து இருப்பதற்றும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் குறுகிய அன்றிலிருந்த இன்றுவரை கடைப்பிடித்து வந்திருக்கின்றன..

இந்த நிலைமையே இன்றும் தொடர்கின்றது.2011ம் ஆண்டுக்குரிய வரவு,செலவுத் திட்டமும் இதையே தெட்டத்தெளிவாக எடுத்தியம்புகின்றது. யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் பாதுகாப்புச் செலவினமும் யுத்த வெற்றியைக் கொண்டாடும் செலவினமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது. பாரிய நிர்மாணப திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் நடக்கின்றன. இந்தத்திட்டங்களினால் தேசத்தின் பொருளாதார வனர்ச்சிக்கு ஏற்படப்போகும சாதகமான தன்மைகளைப் பற்றிய கணிப்புகள் எதையும் மத்திய வங்கிக்கோ, திறைசேரிக்கோ, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கோ சிங்கள தேசிய வாதத்தையே பாராளுமன்றத்திற்கோ, தேசத்தின் முழுப் பொருளாதாபரத்தையும முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஜனாதிபதியின அறிவித்ததேயில்லை. அதனால் ஏற்படப்போகும் பாரிய பாதிப்புகள் தெளிவாக மக்களுக்கு இன்னமும் விளங்கியபாடில்லை. சுபிட்சத்தக்கான எதிர்பாரப்புகள் மத்திய வங்கியின் புள்ளி விபரங்களிலேயே தங்கியிருக்கின்றன. திறைசேரியோ தேசத்தின நிதி முகாமைத்தவத்திற்கு, இந்த வரவு செலவு திட்டத்திற்கு அப்பால எதிர் வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படப்போகும நிதி குறை நிரப்பு மசோதாக்களையே நம்ப வேண்டியநிலையிலிருக்கின்றது. சீரழியும் பொருளாதாரத்தை மேலும் நாசமாக்கும்வகையில் தேசத்தின் வெளிசாட்டுச் செலவாணி விதிகள் தளர்த்தப்பட்டு பாரிய வசதிகள் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளி வர்க்கத்தினருக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன..

ஆனால். நாடோ பாரிய கடன் சுமையில் முழ்கியிருக்கின்றது. நிர்வாகத்தில் ஊழல்களும், உதாசீனங்களும்,மோசடிகளும் மலிந்து சாதாரண அனடறாடம் காய்சிகளின் வாழ்க்கைச் செலவு
பாரிய அதிகரிப்புக்குள்ளாகி தேசத்தின பெரும்பான்மையினரின் வாழ்க்கைத் தரம் மிகத் தாழ்ந்து
போயிருக்கின்றது. இந்தச் சீரழிவுகளின விபரங்கள் மக்களைப் போய்ச் சேராமல் எல்லா வெகுஜன தொடர்பு சாதனங்களும் நேரடியானதும் மறைமுகமானமான அரச கட்டுப்பாட்டடினுள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் எமத மத்திய குழு பாசிசத்தின் அச்சுறுத்தலை இனம் கண்டு பிடித்திருக்கின்றது. பாசிசம் என்பது மக்கள் மீது, திணிக்கப்படும் நாணய முலதனத்தின் மிக மோசமான பிற்போக்குச் சக்திகளினதும், இனவெறிச் சக்திகளினதும், ஏகாதிபத்தியச் சார்புச் சக்திகளினதும், பகிரங்கமான வன்முறைச் சர்வாதிகாரம் ஆகும்.

இன்றைய இலங்கையின் அரசியல், சமூக , பொருளததார யதார்த்தம் இந்தப்பாடத்தைத்தான் எதக்குத் தெட்டத்தெளிவாக சொல்லித்தருகின்றது. இந்த எதிர்வரப்போகும் பாசிசத்தை நோக்கிய பிரளயத்தை தடுத்து நிறுத்தி தேசத்தையும் மக்களையும காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு எல்லா ஜனநாயக, இடதுசாரிஷ. முற்போக்குச் சக்திகளையே சாரும். இலங்கையின் வரலாற்று முக்கியத்துவாய்ந்த இந்த கால கட்டத்தின் அரசியல், சமூக, பொருளாதார தேவைகளின் அடிப்படையில்,'ஜனநாயக மீட்சிக்கான ' போராட்டத்தை முன்னெடுக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் எமது மத்திய குழு, எல்லா இடதுசாரி, ஜனநாயக. முற்போக்குச் சக்திகளையும் இன, மத. பேதங்களை மறந்து ஓரணி திரளுமாறு அழைப்பு விடுக்கின்றது.

எமது மத்திய குழு எமது கட்சியின் முதலாவது தேசிய மகாநாட்டை 2010 டிஸெம்பர் மாதம் 10ம் நாள் புத்தளம் விருதோடையில் கூட்டுவதற்கும் தீர்மானிக்கின்றது.

மு.க.ஆபூயூசூப்
பொதுச் செயலாளர்.
மத்திய குழு.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com