என்ட் கவுண்டரில் மேலும் இருவர் பலி.
வறக்காபொல பிரதேசத்தில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு கொள்ளையர்கள் இன்றுகாலை பொலிஸாரின் என்ட் கவுண்டர் நடவடிக்கையில் பலியாகியுள்ளனர். நகைகள் அடவு பிடிக்கும் கடை ஒன்றை முற்றுகையிட்ட கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் இரு பொலிஸார் உயிரிழந்திருந்தனர். இந்நி லையில் மீரிகம பிரதேசத்திலுள்ள காடு ஒன்றினுள் ஓடி மறைந்த கொள்ளையர்களை வேட்டையாடும் இராணுவ - பொலிஸ் என்ட் கவுண்டர் நடவடிக்கையில் இதுவரை நான்கு கொள்ளையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவரையும் தேடும் நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment