புலித்தாலியுடன் சன் சீ கப்பலில் கனடா சென்ற பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா சென்ற பெண்ணொருவர் விடுதலைப் புலிகளினால் வழங்கப்படும் புலிச் சின்னம் கொண்ட தாலிக்கொடியினை அணிந்திருந்ததாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என கனேடிய அரசாங்க பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் ,யக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் பெண்ணின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் தடை உள்ளது. ,ந்நிலையில் குறித்த பெண் மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தினத்திலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய எல்லை சேவைகள் அமைப்பின் விசாரணை அதிகாரியான ஜெனிபர், குறித்த பெண் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவரைத் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண், விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த நூலகமொன்றில் கடமையாற்றி வந்துள்ளார் என்றும் ஜெனிபர் கூறியுள்ளார்.
,வரிடமுள்ள தாலிக்கொடியானது விடுதலைப் புலிகள் ,யக்க அங்கத்தவர்களுக்கு அவ்வியக்கத்தினரால் வழங்கப்படும் பரிசு என்றும் அதற்காகவே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் ,யக்கத்தைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ள ,ந்தப் பெண், கனேடிய பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைக்கு நேரடியாகப் பங்குபற்றவில்லை எனவும் ரெலி கொன்பரன்ஸ மூலமாகவே அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
,ந்நிலையில் குறித்த பெண் சார்பில் வாதாடியுள்ள சட்டத்தரணி, மேற்படி பெண் வேலை செய்ததாகக் கூறப்படும் நூலகம் விடுதலைப் புலிகள் ,யக்கத்தினரால் நடத்தப்பட்டது எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் ,ல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
,ருப்பினும் குறித்த பெண் மீதான சந்தேகம் வலுப் பெற்றுள்ளதால் அவரை தொடர்ந்தும் காவலில் வைக்க அகதிகள் சபை தீர்ப்பளித்ததை அடுத்து அந்தப் பெண் விம்மி விம்மி அழுதுள்ளார் என்றும் மேற்படி கனேடிய ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment