தனிநாடு அல்லாத கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லையாம்!!!
இலங்கையின் சமாதான முன்னெடுப்பில், இலங்கையரின் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைப் போக்கும், தமிழர்களுக்கான தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமையுமே அடிப்படை சவால்களாக அமைந்தன என சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அதீத ஈடுபாடு காட்டியதுடன் திருப்தியும் வெளியிட்டது. இந்தியாவும் எமக்குச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.
என்னைப்பொறுத்த வரையில் அமெரிக்கா இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக மறைமுக நோக்கங்கள் அற்ற நேர்மையான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்று சொல்வேன்.
சமாதான முயற்சிகள் யாவும் மிகவும் நுணுக்கமான முறையில் கையாளப்பட்டன. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பும் கிடைத்தது. எம்மிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கமாட்டார்களொன நாம் உறுதியாக நம்பினோம்.
ஆனால் சமாதான முன்னெடுப்பில் இரு அடிப்படையான சவால்கள் காணப்பட்டன. இதில் முதலாவது இலங்கையரின் கட்சிகளுக்கிடையி லான ஒத்துழையாமைப் போக்கு. அடுத்தது தமிழர்களுக்கான தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமை. இதனைப் பல நிகழ்வுகள் எமக்கு உணர்த்தின என அவர் மேலும் தெரிவித்தார்.
1 comments :
கள்ள நோக்கம் கொண்ட புலிகளும், அரசாங்கமும் எப்படி மக்களுக்காக சமாதான தீர்வு காண நினைப்பார்கள்?
அவர்களின் உழைப்பு, பிழைப்பு எல்லாம் பிரச்சனைகள், சண்டைகள், அழிவுகள் போன்ற கொடூரங்களில் தங்கியுள்ளது. எனவே அவர்களால் மக்களையும் நாட்டையும் பற்றி எப்படி அக்கறைப்பட முடியும்?
அவர்களுக்கு சமாதானம், அமைதி, தீர்வு என்றாலே பிடிக்கமாட்டாது. இதை விளங்கிக்கொள்ளாமல் உலகமே ஏமாந்து விட்டது.
Post a Comment