ஐரோப்பாவில் பனிப் பொழிவு: விமானச் சேவைகள் ரத்து
லண்டன் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ëஜர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பெரு மளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் எங்கு பார்த்தாலும் பனி உறைந்து காணப்படுகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப் பியத் தகவல்கள் கூறின.
இங்கிலாந்தில் வழக்கத்தை விட கடும் குளிராக இருப்பதால் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பல ரயில் நிலையங்கள் மூடப்பட்ட துடன் சாலைப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுவிட்சர்லாந்தின் சூரிக் விமான நிலையமும் பனியால் சூழப்பட்டதால் அங்கு பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதே போல ëஜனீவாவிலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் விமான நிலையங்களில் அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
இந்நிலைமைகளையிட்டு சிறிலங்கன் ஏயார்லைன் விமான சேவையின் கொழும்பு லண்டன் சேவை தடைப்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. நாளை 20 திகதி லண்டன் பயணம்செய்ய பதிவு செய்துள்ள பயணிகள் விமானநிலையம் புறப்படுமுன்னர் சிறிலங்கன் எயார்லைன் தொலைபேசி எண்களை 0197335555 / 0197332377 / 0197332321) தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இன்று கொழும்பு மாலைதீவு - லண்டன் விமான சேவை மாலைதீவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. மாலைதீவிலிருந்த குறிப்பிட்ட விமானம் புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment