'பிளாஸ்க்' வெடிகுண்டு: அமெரிக்க விமான நிலையங்களில் உஷார்
'பிளாஸ்க்' வெடிகுண்டு மூலம் விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விமானத்தில் செல்லும் பயணிகள் தங்கள் கையில் பிளாஸ்க்கை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி, பிளாஸ்க்குகள் குளிர் நிலையில் வெடி பொருட்களை செலுத்தி அதை வெடிக்க செய்து விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்க்குகள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக காவக்ல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்தாலியில் அனைத்து தூதரகங்களிலும் வெடிகுண்டு சோதனை.
இத்தாலி தலைநகர் ரோம் நகரிலுள்ள அனைத்து நாட்டு தூதரகங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளன. ரோம் நகரில் உள்ள ஸ்விட்சர்லாந்து மற்றும் சிலி நாட்டு தூதரகங்களில் நேற்று பார்சலில் வந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் பலியானார்கள்.
இதனால் ரோம் நகரிலுள்ள அனைத்து நாட்டு தூதரகங்கலும் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோம் நகரில் உள்ள அனைத்து நாட்டு தூதரகங்களிலும் இத்தாலிய காவல்துறையினர் இன்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதே சமயம் அனைத்து நாட்டு தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment