சாள்ஸ் அன்ரனி நீலச் சேட்டுடன் சரணடந்தாரா? பின்னர் நீலச் சேட்வழங்கப்பட்டதா? பீமன்.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் எனும் பெயரால் மக்களை ஏமாற்றி வந்த புலிகள் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களினதும் பலவந்தமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இளைஞர் யுவதிகளினதும் உயிர்களை பலி கொடுத்து இறுதியில் இலங்கை அரசிடம் உயிர் பிச்சை கேட்டு மண்டாடியுள்ள சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களிடம் கோரக்காட்சிகளையும் மனதை, உருக்கக்கூடிய , அனுதாபத்தை தரக்கூடிய காட்சிகளையும் காலம்காலமாக காட்சிப்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொண்டிருந்த புலித்தலைமை இலங்கை அரசிடம் மண்டியிட்டுள்ளமை இறுதியாக வெளியான விடியோ காட்சி ஒன்றில் உறுதியாகியுள்ளது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான போர் குற்றம் எனவும் தமிழ் மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற புலம்பெயர் புலிகள் முனைந்துள்ளனர். அதில் ஒரு தொகுதி வெற்றியும் கண்டுள்ளனர் எனக் கொள்ளலாம். இறுதியாக வெளியான வீடியோவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கான புலிகளின் சிறப்புத் தளபதி ரமேஸ் கெஞ்சும் காட்சி தமிழ் மக்களின் ஒருபகுதியினரின் மனதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தமிழ் மக்கள் புலிகளின் இத்தளபதிகளின் நிலைகண்டு கண்கலங்குவது அல்லது அவர்களுக்காக அனுதாபப்படுவது நியாயமானதா என்பதே கேள்வி... இறுதிவரை போராடுவோம், சரணடையமாட்டோம், விலைபோக மாட்டோம் என்ற வீராப்பு வசனங்களுடன் தமிழ் இளைஞர் யுவதிகளின் விலைமதிப்பற்ற உயிர்களையும் , தமிழ் மக்களின் முழு பொருளாதாரத்தையும் யுத்தத்தில் அழித்த புலிகளின் தலைமை இறுதியாக மண்டியிட்டு உயிர்பிச்சை கேட்டுள்ளது.
சிறியதோர் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் யுத்தம் உக்கிரமடைந்து தோல்வி என்பது நிச்சயமாகி விட்ட நிலையிலும் , இறுதிவரை போராடுவோம் தற்கொலை தாக்குதல்களை நாடாத்துங்கள் என பாதுகாப்பான பங்கரினுள் இருந்த பிரபாகரன் உத்தரவிட்டார். தமிழ் மக்களின் முழுப்பொருளாதாரத்தையும் திரட்டி அமைக்கப்பட்ட விமானப்படை மற்றும் அதன் விமானிகளையும் 2009 பெப்ரவரி மாதம் 20 திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுப்பி வைத்தார். அவ்விமானங்கள் , மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் பங்கெடுத்திருக்ககூடிய அந்த விமானிகளை பிரபாகரனால் காப்பாற்றியிருக்க முடிந்திருந்தது.
ஆனால் மறுபுறத்தில் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசுடனும் மேற்குலகுடனும் பேரம்பேசலில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தான் என்பதை எஞ்சியுள்ள புலிப்பினாமிகள் மறைக்கமுனைந்தாலும் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வெகு காலங்கள் இல்லை. உண்மை என்பது முற்றிலும் காற்று நிறைக்கப்பட்டதோர் பலூண் போன்றதாகும். அதை நீரினூ அமிழ்த்திக்கொண்டிருந்தாலும் பலத்தகாற்று , மழை , அமுக்கம் போன்ற இயற்கை கோளாறுகள் தாக்குகின்றபோது கைவிடுபட்டு பந்து வெளிவரும் என்பது நியதி.
பிரபாகரனின் மகன் இறந்துவிட்டார் என்ற செய்தியை வெளியிட்ட இலங்கை இராணுவத்தின் இணையத்தளம் சற்று நேர இடைவெளியில் இவ்விரு படங்களையும் வெளியிட்டது. இங்கே இணைக்கப்பட்டுள்ள இருபடங்களையும் சற்று உற்றுநோக்குவோமானால் பிரபாகரனின் மகன் சாள்ர்ஸ் அன்ரனி உயிருடன் உள்ள படத்தில் காணப்படும் அதே நீலச் சேட்டுடன் இறந்து கிடப்பதை காணமுடிகின்றது. புலிகள் இறுதியில் சரணடைந்துள்ளனர் என்பதற்கான சிறியதோர் அத்தாட்சியாக இதை எடுத்துக்கொள்ளலாம். இவ்விடயத்தில் இதற்கு மேலாக நான் எந்த ஆய்வையும் தற்போது மேற்கொள்ள விரும்பவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளுகின்றவர்கள் இது எவ்வாறு நடத்திருக்கும் என்பதன் தங்கள் விவாதங்கள் ஊகங்களை இந்த ஆக்கத்திற்கான பின்னுட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
மேலும், புலிகள் சரணடைந்திருந்தபோதும் வெளியாகியுள்ள வீடியோவின் அடிப்படையில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் புலிகளுக்கானதோர் சீருடையில் சரணடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் புலிகளின் தலைவரின் மகனோ நீல சேட்டுடன் சரணடைந்திருக்கின்றார். இதன் பின்னணி யாது?
இலங்கை அரசுடன் தந்திரோபாயமாக ஒப்பதந்தம் ஒன்று செய்து மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் நில்பலகாய எனப்படும் நீலப்படையணியில் இணைந்து தமிழீழப் போராட்டத்தை (புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்) முன்னெடுப்பதற்காகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளர் பதவியினை பெற்றுக்கொள்வதற்காகவும் நீலச்சேட்டுடன் சரணடைந்தார் என புலம்பெயர் புலிகள் அர்த்தம் கற்பித்தாலும் நாம் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
பிரபாகரன் மகன் மாத்திரம் நீல உடையுடுத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை திருப்திப்படுத்த முனைந்திருக்கவில்லை. புலிகளின் முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி மற்றும் கிழக்கு தளபதி கருணா ஆகியோருமே நீல உடையில்தான் வலம்வருகின்றனர்.
புலிகள் இம்முறை ஏமாற்றப்பட்டிருக்கின்றார்களா என்ற விவாத்திற்கு அப்பால் புலிகளின் வரலாறு இதுவே என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். புலிகள் காலம்காலமாக சிங்கள அரசுடன் இணைந்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். அதன் ஒருவடிவமே தற்போது புலம்பெயர் தமிழரால் மேற்கொள்ளப்படும் போர்குற்ற பூச்சாண்டி. புலம்பெயர் தேசத்திலே உள்ள புலிகளில் 90 விழுக்காடு புலிகள் மகிந்த அரசுடன் இரகசிய ஒப்பந்தத்துடனேயே செயற்படுகின்றனர். சிங்கள மக்களிடமிருந்து மஹிந்தவிற்கு அனுதாபத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே புலிகள் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். பிரபாகரன் சரணடைந்ததும் வன்னியில் நடைபெற்ற விடயங்களும் போர்குற்ற விசாரணைப் பூச்சாண்டி காட்டுகின்ற மேற்குலகத்திற்கு தெரியாத ஒன்றல்ல. நடந்து முடிந்த விடயங்களில் அவர்களும் பங்காளிகளே. சரணடைவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் மேற்குலகத்து முகவர்களும் புலம்பெயர் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அவற்றை வெளியிட தயாராக இல்லை. எனவே புலிகளின் தலைமை தமது சூதாட்டத்தில் தோற்றுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் சூதாடுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்.
இலங்கையின் ஜனாதிபதியை நிர்ணயிக்கபோவது சிங்கள மக்களே. தென்னிலங்கையிலே மஹிந்த சகோதரர்களின் செயற்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பலத்த எதிப்பலைகளை தோற்றுவித்து வருகின்ற நிலையில் அம்மக்களின் சிந்தனைகளை திசைதிருப்புவதற்கு புலிகள் மஹிந்தவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே புலம்பெயர் புலிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
புலிகளிடமிருந்து இலங்கைக்கும் அதன் இராணுவத்தினருக்கும் அச்சுறுத்தல் உண்டு எனக் காண்பிப்பதனூடாக இனவாத சிங்கள வாக்குகளை இலகுவாக சுவிகரிக்க முடியும் என்ற மகிந்தவின் அரசியல் தந்திரத்திற்கு புலம்பெயர் தமிழர் தொடர்ந்தும் துணைபோக தயாரகவுள்ளனரா?
VIII
1 comments :
அன்று, இலங்கைத் தமிழரின் பிரட்சனைகளுக்கு ஒரு சாத்தியமான தீர்வு காணும் முகமாக, உலகநாடுகளும், சமாதான விரும்பிகளும், பெரும்பானமையான தமிழ், சிங்கள மக்களும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால், அந்த நம்பிக்கைக்கு எல்லாம் ஆப்பு வைத்தது போல், மறைமுகமாக புலிகளும், மகிந்தாவுடன் பேசி, பல கோடி பணம் பெற்றுக்கொண்டதுடன், தமிழ் மக்களை ஜனாதி தேர்தலில் பங்களிப்பதை தடுத்துவிட்டார்கள்.
அதனால், தமிழர்களின் வோட்டுகள் இன்றி ரணில் தோற்று விட்டார். மகிந்தா ஜனாதிபதியார்.
மகிந்தா, புலிகள் சதி வென்றது.
தமிழ் மக்கள் ஏமாற்ற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்பட்டார்கள்.
Post a Comment