ஐ.ம.சு முன்னணியின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள மாத்தறை மாவட்டத்தின் தங்கல்ல பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் பிரதி தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் மேலும் ஒரு உறுப்பினருமாக இருவர் எதிர்கட்சியுடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடித்துள்ளனர்.
நிசாந்த சந்தபரண, விமல்கேவா துணுவில ஆகிய இரு உறுப்பினர்களே ஆழும் கட்சியிலிருந்து கொண்டு எதிர்த்து வாக்களித்தவர்களாகும். குறிப்பிட்ட பிரதேச சபை 9 அங்கத்தவர்களை கொண்டதாகும். இதில் 5 ஆழும் கட்சியினரும், 4 எதிர்கட்சியினரும் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாத்தறை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment