புலிகளைப் பிளவுபடுத்தவே எனது தந்தை ஆயுத, நிதி உதவிகளையும் வழங்கினார் சஜித்.
புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்திலேயே தனது தந்தை அந்த இயக்கத்துக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கியிருந்தார் எனத் தான் நம்புவதாகப் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச லங்காஈநியுஸ் சிங்கள இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யோகி, மாத்தையா போன்றோரைப் பயன்படுத்திப் புலிகள் இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு தந்திரமாகவே எனது தந்தை அந்த இயக்கத்துக்கு நிதியும் ஆயுதங்களும் வழங்கியிருக்கலாமென நான் நினைக்கிறேன்.
ஏனெனில், அன்று மாத்தையா கூட அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணத்தைக் கொண்டவராகக் காணப்பட்டார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் எனது தந்தை மட்டுமே இவ்வாறான தந்திரங்களைப் பிரயோகித்தார் என்று கூற முடியாது.
ஜே.ஆர். ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போன்றோரும் இந்த விடயத்தில் பல்வேறு தந்திரங்களைப் பிரயோகித்திருந்தனர். ஆனால் இவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வெற்றி கண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment