என்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து மிகவிரைவில் விடுபடுவேன். யுலியன் அசாஞ்
“என் மீது சாட்டப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு என் நற் பெயருக்கு களங்கத்தை ஏற் படுத்தும் முயற்சி. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விரைவில் விடுதலை பெறுவேன்,” என்று லண்டன் உயர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுனர் யுலியன் அசாஞ் கூறியுள்ளார்.
லண்டன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசி னார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை சுவீடனுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டதும் இணையத்தளப் பணி யைத் தொடரப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவத் தகவல்களை விக்கி லீக்ஸ் இணையத்தளம் வெளி யிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இணையத்தள நிறுவனர் அசாஞ் மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை பிரிட்டிஷ் போலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அசாஞ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் லண்டனில் தனது நண்பரும் பிரபல பத்திரிகை யாளருமான வாகன்ஸ்மித்தின் எஸ்டேட் பங்களாவில் தங்கி யிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வீக்கிலீக்ஸ் வெளியீடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆஸ்திரேலியப் போலிசார் தங்கள் விசாரணைகளை கைவிட்டுவிட்ட தாகக் கூறியுள்ளனர். அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிடு வதில் அந்த இணையத் தளம் சட்ட விதிமுறைகளை மீறவில்லை என்பது தெரியவந்திருப்பதாக ஆஸ்திரேலியப் போலிசார் தெரி வித்துள்ளனர்.
விக்கிலீக்ஸ் வெளியீடுகள் சட்ட விரோதமானது என்று ஆஸ்தி ரேலிய அரசாங்கம் முன்னதாகக் கூறியிருந்தது.
0 comments :
Post a Comment