Friday, December 3, 2010

இணையதளம் முடக்கம். புதிய முகவரிக்கு மாறிய விக்கிலீக்ஸ்.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளது. அதன் www.wikileaks.com மற்றும் www.wikileaks.org ஆகிய இணைய தள முகவரிகளை அமெரிக்காவின் சிஐஏ நடவடிக்கை எடுத்து முடக்கிவிட்டது.

இதை முன்பே எதிர்பார்த்த விக்கிலீக்ஸ், அடுத்த சில மணி நேரங்களில் www.wikileaks.ch என்ற புதிய இணையதள முகவரியில் இயங்கத் தொடங்கிவிட்டது.

இதை டிவிட்டர் மூலம் உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

''எங்கள் நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து, உண்மைகளை மட்டுமே வெளியிட்டுள்ளோம், இதனால் யாருக்கும் பயப்படப் போவ‌தில்லை. எங்கள் சேவை மேலும் தொடரும். அதற்கு நன்கொடையாளர்கள் ‌‌‌தேவை'' என்றும் விக்கிலீ்க் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய சுமார் இரண்டரை லட்சம் ரகசிய கேபிள் தகவல்களை கடந்த ஒரு வாரமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com