மீசாலையில் இராணுவ சிப்பாயை அடித்துக் கொன்ற இளைஞன்.
யாழ் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞன் பிரதேசத்தில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாயை அடித்துக் கொலைசெய்த சம்பவம் ஒன்று இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்று மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளை பொல்லால் அடித்துடைத்துக் கொண்டிருந்த இளைஞனை இராணுவ சிப்பாய் ஒருவர் தடுக்க முற்பட்டபோதே சிப்பாயை இளைஞன் அடித்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தை கண்ணுற்ற மேலுமொரு சிப்பாயால் இளைஞன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் மனநிலைபாதிக்கப்பட்டவர் என தெரியவருகின்றது.
இவ்வாறானதோர் சந்தர்ப்பத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை இராணுவ வீரர் சுட்டுக்கொல்வதற்கு இலங்கை சட்டத்தில் எவ்வாறு இடமளிக்கப்பட்டுள்ளது என்பது இடம்பெறவிருக்கும் விசாரணைகளிலிருந்து வெளிவரும்.
0 comments :
Post a Comment