யுத்தத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்க அரசு உதவி கோருகின்றது.
யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த சிறுவர்களை பாராமரிப்பதற்கு தனியாரிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. அரசின் இந்நோக்கத்தினை தேசிய சிறுவர் பாதுப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரியப்படுத்தியுள்ளார். இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இச்செயற்திட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம் 1100 பேர் இருப்பதாகவும், இவர்களில் சிலருகக்கு தந்தை, தாய் இருவருமே இல்லையெனவும், சிலருக்கு இருவரில் ஒருவர் மாத்திரம் இருப்பதாகவும், இவர்களில் சிலர் உறவினர்களுடன் சேர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குழந்தைகளுக்கு உதவிபுரிய விருப்பமுடையவர்கள் குறிப்பிட்ட சிறுவர்களில் விருப்பமானவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு சட்டரீதியாக உதவிகளை வழங்கும் பராமரிப்பு பெற்றோர் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 10 வயதுக்கு உட்பட்வர்களுக்கு 1500 ரூபாவும், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாவும் விரும்பி வரும் பராமரிப்பு பெற்றார்களிடம் பெற உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறுவர்களுக்கு உதவி புரிய விருப்பமுடையவர்கள் 1929 தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment