Thursday, December 30, 2010

மஹிந்தர் மக்கள் ஆதரவை இழக்கின்றார். முன்னாள் பிரதமர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்றாடம் மக்கள் ஆதரவை இழந்துவருவதாக இங்கிரியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சிரேஸ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அரசு இழைக்கும் தவறுகளின் காரணமாக ஜனாதிபதி மஹிந்தர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அருகிவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

இன்றைய நிலைமைக்கு அரசை இட்டுச் செல்வதற்காக ஆலோசனை வழங்கி வரும் கும்பல் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர்களுடைய ஆலோசனைகள்படி நடக்கும் அரசுக்கு மக்கள் உரிய பதில் அளிப்பர்.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் அதுகுறித்து மக்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள், எவ்வித திட்டமொன்றும் இல்லாமல் பொருட்களின் விலை அதிகரிப்பதனால் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல் போகிறது.

1 comments :

Anonymous ,  December 30, 2010 at 7:00 PM  

Changing the mind frequently.
This is the weakness of every single politicians of Srilanka.

President MR has the power.
But, first of all, he is hesitating to implement some certain strict rules and regulations against our countries traditional beheviour and stupidity.

If he really wanted to see a prosperous future of our country, he would have followed the Singapore system.

But, he is not so courageous president for some reasons.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com