ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை- எஸ்.ஆர்.லெம்பேட்
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும்,அச்சுறுத்தப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஊடகவியலாளர்கனின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்படடுள்ளது.
கடந்த வாரம் மட்டக்களப்பினைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் வீட்டில் வைத்து இனம் தெரியாத காடையர்களினால் தாக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 4 தினங்களுக்கு முன்பு வவுனியாவைச்சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது மன்னாரில் கடமையாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் காடையர்களினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் தற்போது கப்பம் கோருதல், போதைப்பொருள் பாவனை, சமுக சீர்கேடுகள் என்பன அதிகரித்துள்ளது. இவற்றை அதிகாரிகள் எவரும் தங்களின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாததன் காரணத்தினாலும், பொலிஸாரின் அசமந்தப்போக்கின் காரணத்தினாலும் மேற்படி சம்பவம் அதிகரித்துச் செல்கின்றது.
இந்த நிலைமைகள் தொடர்ந்து செல்வதை தடுக்கும் நோக்கில் செய்திகளை அம்பலப்படுத்திய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களை இனம் தெரியாத காடையர் குழுவொன்று தொடர்ந்தும் பின் தொடர்ந்து தாக்க முயற்சிசெய்து வருவதுடன் மன்னார் உடகவியலாளர் இருவரும் காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment