ஊடக பயங்கரவாதம் -அஹமட் ஷா
அண்மையில் நெல்சன் மண்டேலா அமெரிக்கா ஐரோப்பாவினது மூலவள மனிதவள பற்றாக் குறைக்காக ஆப்ரிக்கா ஆசியா தென் அமெரிக்காவென்று போய் முஸ்லிம் கலாச்சாரத்திற்கு எதிராகவென்று நவீன காலனித்துவம் இன்னும் தொடர்கின்ற அவலத்தை விலாவாரியாக புட்டு வைத்திருந்தார்.
கறுப்புநிற அடிமை கிழக்கிந்திய கொம்பனி சோஷலிஸம்; என்றோடி இன்று கொலைகாரப் பாவிகள் புஷ்ஷ்ஊம் டோனி ப்ளேயரும் இது மூன்றாம் சிலுவைப்போர் எனச்சொல்லி பின் மன்னிப்பு கேட்டபின் எண்ணெய்க்காக தொடரும் கொலைக் கலாச்சரம். ஆயினும் நாகரீகமும் மானிட நேசமும் அவர்களாலேயே எமக்கு உபதேசிக்கப்படுகிற அவலம்.
இதன் எச்சமாக இந்தியாவின் இலங்கை மீதான ஊடுருவல். அவர்கள் இன்னமும் நம்புகிறார்கள் மக்கள் இதனை இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை என. இதற்கொரு வரலாறு உண்டு. கடந்த காலம் பூராக மீடியாக்கள் அவர்கள் வசமே இருந்தன. வரலாறுகள், செய்திகள், அறிவுகள் அவர்களாலேயே எமக்குத் தரப்ப்ட்டன.
நமது(ஆசியாவின்) வாழ்வு தனிமனித விடுதலை சமூக விடுதலைக்கு அத்திவாரம் என்பதில் இருந்து உருவானது, எந்த மதமும் மானிடநீதிக்கு புறம்பான கொலையை அங்கீகரிப்பதில்லை, இன விடுதலை இந்த அளவு மனித மனங்களில் ஆழ ஊடுருவி, தன் உயிரைக் கொடுக்குமளவாய் மாற யார் காரணம்? யாரை எதில் இருந்து விடுவிக்க? தன் இனத்தையா அல்லது தனி ஒவ்வொரு மனிதனையுமா? நீங்கள் நேர்மையுள்ளவரானால் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் மூன்றும் பாரிய தவறிழைத்துள்ளன 25,000 சதுர மைல் பரப்புள்ள இலங்கைக்கு வானில் இருந்தபடி ஆளில்லாத விமானத்தினால் எந்த இலக்கையும் தாக்கியழிக்கும் வல்லமை உண்டு. இரண்டு கோடிக்குட்பட்ட ஜனத்தொகையை ஆழ மூன்று இலட்சத்துக்கு மேலான பாதுகாப்பு படையினர். இதன் மறுபுறம் நாம் வெட்கப்படும் படியான வளர்ச்சியில்லையா இது?
நாம் கொண்டாடுகிற தலைவர்கள் யாவரும் தனிமனித ஒழுக்கத்தில் மேலானவர்களகவே இருந்தனர். கால வரலாறுகள் புனிதர்களாக இன்றைக்கும் அவர்களைப் பாடமாக்கி நன்றி கூற வைத்திருக்கிறது. மகான்களைக் கேட்டால் எங்களைப் புடம் போட்டது மதங்களும் பெரியார்களின் வரலாறுகளுமே எனச் சொல்கிறார்கள். இன்னும் விரித்துச் சொன்னால் பணம். புகழ். பதவி எதற்காகவும் தன் சுயம் கெட விடாத மன ஓர்மையும் தன்னளவில் விடுதலை பெற்ற சுதந்திர உணர்வும் மிகப்பெரிய ஆன்ம பலத்தை வழங்கியிருந்தன. அதனால் தன்னிடமிருந்த அனைத்தையும் வாரி வழங்கினார்கள். சர்ச்சில் கோவண
பக்கிரி என்ற போதும் மக்களின் ஏழ்மையில் தன்னலம் தொலைத்த மனம் மக்களின் தலைவனாக்கி இருந்தது.
ஒரு மதம் சார்ந்தவன் இந்த வாழ்க்கை முறையில் இருப்பான் என்பது புரிந்து கொள்ளக்கூடியது. இன்ன மொழி பேசுபவன் இந்த வாழ்க்கை முறையைக் கொண்டு வாழ்கிறான் என்பதை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும் கேள்விக்குரியது.
அன்றைய காலத்தைச் சேர்ந்த ஒரு மகன், தந்தை, மாணவன், ஆசான்,உத்தியோகத்தன், உறவினன், குடும்பம் இதில் எந்த வகையில் உயர்வான ஒருத்தரை இன்றைய காலம் அல்லது கல்விமுறை தோற்றுவித்துள்ளது.
சான்றோர் சபையில் தன் மகனை முந்தியிருக்கச்செய்தல் என்பதை ஒட்டு மொத்தமாக மாற்றி அடுத்தவனை அழித்தாவது பணம் பண்ணுதலை உழைப்பெனக்கொண்டாடுகிற காலம் இது. இதனால் அக புற விடுதலை இன்றி தலைவனோ மக்களோ நம்மிடம் வந்து சேரவில்லை. மிக இலகுவாக பணம் அதிகாரம் பண்ணும் ஒரு மிலேச்சத்தனமான அயோக்கியர்களின் உறைவிடமாக அரசியலும் மதமும் மாறிப் போயிற்று.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என நாம் வேறுபடுத்திப் பார்க்கவும் தன் இலாபம் ஒன்றுக்காகவே கட்சி வளர்தத அரசியல்வாதியை விட.. அவர்களுக்கு ஆதரவாக எழுத்துக்களை பிரசவித்து பத்திரிகைளினூடு மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்த எழுத்தாளக்கண்மணிகள் மாபெரிய பாவிகள். எழுத்தின் வல்லமை ஆழமானது: நீண்ட நாட்கள் நின்று ஆட்சி செலுத்த வல்லது.
தமிழகத்தில் ராஜீவ் காந்தியை கொன்று அழிந்துபோயிருந்த தொப்புள் கொடி உறவை மீளக்கட்டியெழுப்ப ஆனந்த விகடனின் ஆசிரியர் மாறி சீனிவாசன் வந்து
வாக்கெடுப்பு நடாத்த வேண்டியிருந்தது. இதன் உச்சமாக இன்று விக்கி லீக்கி விவகாரம்.
மக்களுக்கு உண்மையை எடுத்துச்செல்கிறோம் எனும் விளம்பரத்துடன் வருகிற இவர்கள் மிகப் பெரும் பாவிகள். மக்களுக்கு உண்மையை எடுத்துச்செல்கிறோம் எனும் விளம்பரத்துடன் வருகிற இவர்கள் பாம்பாட்டியின் கரு நாகங்கள். உடல் சரிப்பது வீரமல்ல. கருத்தை வெற்றி கொள்(ல்)வோம் என்பது நவீன யுத்த தந்திரம்.
அதற்கு பலிக்கடா ஆக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களை இன்னமும் எழுத்தாளர்களாக நம்பி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் மொழி, மதம்,பிரதேசம், கலச்சாரம், இனங்கள்....... என தாங்களும் பிரிந்து மக்க்ளையும் சலவை செய்து ஆங்கிலேய காலம் போலவே பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகள் தற்போது ஆயுதங்களுக்கான செலவை விட அதிகமாக ஊடகத்துறைக்கு பணத்தை வாரியிறைக்கின்றன. விலங்குப் பண்ணை நாவலே முதலாளிகளிடம் பணம் வாங்கித்தான் சமைக்கப்பட்டது எனும் போது இந்த கட்டுடைப்பவர்களை இலேசில் நம்பி விட முடியுமா? இவர்களின் கல்வி முறையும் வாய்ப் பேய்ச்சும் எழுத்தும் களங்கம் சுமந்தவை. சோடாப்போத்தல் போல தற்காலிக பிரச்சினைகளை ஊதிப்பெருப்பித்து சுடச் சுட கடலை யாவாரம் பண்ணுகிரார்கள். தமிழுலகம் கொறித்து மகிழ்வதாக நம்புகிறார்கள். இன்றைக்கு ஊரோடு ஒத்தோடுவதாக நினைத்துக்கொண்டு முஸ்லிம்களின் மீது சேறு பூச வெளிக்கிட்டுள்ளர்கள். இதில் ஹொலிவுட் என்ன நேற்றைய கமல் வரை அடங்கிப் போன போது இந்த வால்கள் எம்மாத்திரம எல்லோரும் போய் விழ சங்கடத்தாரும் விழுந்தெழும்பியது
போல மிகப்பிரமாண்டமான மலையை அசிங்கம் பண்ணுவதாக நினைத்து அடிவாரத்தில் நின்று ஒண்ணுக்கடிக்கிறார்கள். மலை அதையும் கபளீகரம் பண்ணும். தன் ஆறுகளை வழித்தடங்களை நல்ல மானிடருக்காக வழங்கியபடியே இருக்கும்.
1. ஆயிரக்கணக்கனோர் கடப்பாரை, அலவாங்கு, தீவெட்டி, துப்பாக்கிகளுடன் நாட்கணக்கில் பயணம் பண்ணி பாபர் மசூதியை உடைத்தபோது பிரதமராக முதல்வராக இருந்த நரசிம்மத்தை, மோடியை யாரும் இந்து இப்படித்தான் எனச் சொன்னதில்லை.
2. வீரப்ப்ன் இந்து இப்படித்தான் என்பதற்கு உதாரணம் ஆனவனல்ல. பிறப்பால் சிங்கள அல்லது முஸ்லிம் என்பதற்காக அல்லது இந்துவாயிருந்தும் மாற்றுக்கருத்துடையன்
என்பதற்காகக் கொன்று குவித்த பிரபா கும்பல் இந்து அல்ல.
3. இரட்டைக் கோபுரம் தகர்த்தவர்கள் அல்_ கைய்தா - முஸ்லிம் எனும் போர்வையில் நாடளும் மன்னர் ராச்சியங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சரியா சட்டம் எனகிற போர்வையில் மக்களை அடக்கி வைத்துக் கொண்டு அராஜகம் நிகழ்த்தும் அவர்கள் வெறும் முஸ்லிம் பெயர் தாங்கியோர்.
இவை அனைத்துக்கும் சகல வளங்களும் இலஞ்சம் அல்லது அடக்குமுறை கொண்டு ஏவல் செய்விக்க பணிக்கப்படுகிறது. இது மக்கள் அறியாதபடி செய்தியாக அல்லது காணும் காட்சிகளாக அவர்களின் மொத்த மண்டையையும் காவு கொள்கிறது. ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்.
ஊர் விரட்ட ஒரு காதல் ஜோடி ஓடிவருகிறது. கோயில் குரு, மௌலவி, கிறிச்தவ பாதர் ஆகிய மூவரும் அவர்களை எதிர் கொள்கின்றனர். இப்போது சினிமாவிலும் சீரியலிலும் இணையங்களிலும் புத்தியை அடகு வைத்தோரே மனமறிய உண்மை சொல்லுங்கள். இந்த ஜோடிக்கு யார் உதவுவார் என்று நம்புகிறீர்கள்?
ஆம். நாம் மிக வல்லமை கொண்ட ஆயுத, தகவல் தொழினுட்ப உதவியுடன் கிறிஸ்தவ வல்லமை ஆடும் சதிராட்டம் புரியும்போதுதான் மனிதன் மனிதத் தன்மையை விட்டு வெகுநாட்களாயிற்று என்பது புரிபடும். உண்மையில் ஒரு மதத்தை பின்பற்றுபவன் மதத்தன்மை வாய்ந்தவன் இன்னொரு உயிரை அநியாயகரமாகக் கொல்ல முடியுமா? தன்னிடம் ஊழியம் புரிபவனின் உடலில் ஆணிகள் ஏற்ற மனம் விடுமா? இதனை
சுருக்கமாக இரு உதாரணஙகளில் பார்க்கலாம்.
தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலைக்கான அனைத்து தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளும் தமிழ் பேசுகிற அனைத்து முஸ்லிம் சிங்கள மக்களையும் ஓட ஓட விரட்டினார்கள்; அல்லது கொன்று குவித்தார்கள்..
மேதகு சூரியக்கடவுள் சீமானின் உலகத்தமிழரின் தளபதி பிரபாகரன் கூட சரணாகதி அடைகிற போது மெசின் பெட்டி நிறைய பணம் கட்டிய படிதான் வந்தடைந்தார்.
முதலில் எழுத்து என்பதன் வல்லமை புனிதம் எழுத்தாணி எடுப்பவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் மானிட வரலாறு. ஆய்ந்துணர்ந்தவனாக இருக்க வேண்டும். இன்றைய கல்வி சமூக நடைமுறை பலமுள்ளவனை கும்பிடவும் வழியொழுகவும் வழிகாட்டுகிறது. தன் தாயின், கருப்பைவிட்டு மண்ணில் விழுந்ததுமே நீ-இந்த மதம் இந்த பிரதேசம் இந்த மொழி தெரியுமா? என்று சிறுகச்சிறுக உருப்போடவைத்து பின்னர் அவன் ஒரு மனிதன், மனிதத்தன்மை வாய்ந்தவன் என்பதை மறக்கடிக்கச் செய்கிறார்கள். பின்னர் தான் விசுவாசிக்கிற பகுதியினரின் மாபெரும் கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்க வெளிக்கிடுகின்றனர். பெற்றோரும் ஏன் ஒட்டு மொத்த் சமூகமே இதில் முதன்மை வகிப்போரை தலையில் வைத்துக் கொண்டாட எங்கு தேடினாலும் மனிதனைக்காண முடியவில்லை. முன்னே நிற்பவர் சிங்களவர், தமிழர் அல்லாது போயின் முஸ்லிமாகவே அறியப்படுகிறார்.
ஒரு மனிதன் அல்லது சமூகம் அல்லது நாடு நிம்மதியான வாழ்வு மேற்கொள்ள அச்சமற்ற சூழல் அவசியம். இன்றைக்கு நம்மை ஆழ்பவர்கள் யாவரும் மனித அச்சத்தினை முதலீடாக்கி அரசாழ்பவர்கள். அதற்கு ஒத்தூதுபவர்களாகவே நம் எழுத்தாளர்களும் கொமிசார்களும் இருந்து வந்துள்ளனர்.
இன்றைக்கும் நிலைத்து நிற்கிற எழுத்துக்களை மனிதர்களை யார் என்று நம்மக்களுக்கு இதுவரை மௌனமாய்ப் போன பெருந்தகைகள் இனியாவது சொல்லிக்கொடுக்க வெளிவரட்டும். எந்தக்காலத்திலும் அழியாத உண்மை ஒன்றாகவே இருக்க் வேண்டும். தன் மனச்சாட்சிக்கு களங்கமற்றவனாலேயே பரவச வாழ்வு பெற முடியும். எந்த இயற்கையையும் கலையையும் மன ஈடுபாட்டுடன் அனுபவிக்க முடியும். தமிழில் வந்த வருகிற பெரும்பாலான பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் சம்பவங்களை சூடாக வழங்குவதிலும், மானிட நீதிக்கு அப்பால் ஒருபுறம் நியாயப்படுத்தி தொடர்ந்தும் சுடுதண்ணீரிலேயே தலையை வைத்திருக்கும்படி பேணுவதிலும் கருத்தாயிருந்தன.
அதனால் வந்த பழக்கதோசம் மாறவே மாட்டோமென்று அடம் பிடிக்கிறார்கள். தேசம் மகிந்தவினால் ஓரளவு நிமிர வெளிக்கிட்டாலும் தேச எழுத்துக்கள் எடுக்கும் வாந்திகள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒரு நல்ல எழுத்து அது தொடுகிற புள்ளியில் பாண்டித்தியம் பெற்றவர்களால் எழுதப்பட்டபின் அதை கூறுபிரித்து அடுத்தவர்கள் அலச வருவது வளர்ச்சியை அறிவைக் கூட்ட துணை போகலாம். அதை விடுத்து எல்லாமே
எனக்குத்தெரியும் என்பதாக நினைத்துக்கொண்டு எழுதுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல தெனாலி படம்போல 'இது எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்' என எல்லாவற்றிலும் மூக்கு நீட்டல் என்கிற பீலிங் வருது.
ஒரு சிறந்த எழுத்தாளன் கடந்தகால வரலாறுகளை பக்கம் சாரது ஆய்ந்துணரும் நேர்மை கொண்டவனாய் இருக்க வேண்டும். மொத்த மானிடத்தின் மீது அன்பு கொண்டவனாயிருக்க வேண்டும். இதுவெல்லாம் கூடிய எதிர்பார்ப்பு எனச்சொல்லக்கூடும். ஆனால் தொடர்ந்தும் ஆண்டுக்கணக்காக நீங்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் இன்னமும் நீங்கள் பாடம் படிக்கவில்லை என்று பொருள்.
ஆண்டுக்கணக்காக எழுதுகிறோம்ல: என்பது ஒரு தகுதி ஆகாது. எங்களுர் சாய்பு நானா இருபது வருசமாக றைஸ் மில்லில் வேலை பார்த்தவர். சாயங்காலம் காண்கிறபோது எங்கிருந்து வாறீர்? எனக்கேட்டால் எழுத்து வேலை பார்த்திட்டு வர பிந்திட்டு என்பார்.
மொழி, மதம், மனிதம், விடுதலை, சுதந்திரம் என எதுவுமே தெரியாவிட்டாலும் இன விடுதலை எனும் போர்வையில் போட்ட தப்பாட்டம் தெரியவே ஆண்டுகள் பல போயின.
அதேபோல் இந்த எழுத்துக்களின் சாயம் களருகிரபோது நீங்களும் அம்மணமாக நிற்பீர்கள். ஒரு விடுதலைப் போராட்டம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு புலிகள் சான்றாகினர் என்பதையும் ஒரு பத்திரிகை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணங்கள் இவை என்பதையும், தேசம் மணக்கும் நாள் நிச்சயம் பதிவாகும்.
கடைசியாக இந்த வலையில் அள்ளுண்டு அறிவு காணும் அப்பாவிகளுக்காக மாநபியின் வாக்கு ஒன்றை தரலாம்: முட்டாளுடன் விவாதம் செய்கிறபோது யார் முட்டாள் என்பது தெரியாமல் போய் விடும்.
0 comments :
Post a Comment