ஐ.நா குழுவின்காலம் நீடிப்பு. ஆனால் குழு இலங்கை வராது தப்பியோட முயற்சி.
இலங்கையில் இடம்பெற்றதாக குற்றச்சாட்டப்படுகின்ற போற்றங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு ஐ.நா வின் பொதுச் செயலாளருக்கு பரிந்துரை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை சமர்பிப்தற்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்உத்தரவினை ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி-மூன் வழங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் காலவரையறை டிசம்பர் இறுதிவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் பான் கி-மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அறிக்கை டிசம்பர் 15-க்குள் அளிக்கப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம் ஐ.நா. நிபுணர் குழு இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பயணம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐ.நா. செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் அது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவானது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திக்கும் நோக்குடன் இருந்தாலும், அச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பதை தீர்மானமாகக் கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் அக்குழுவினருக்கு இலங்கை வருவதற்கான அனுமதி கிடைத்திருப்பது குறித்து பான் கி மூன் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா வின் விசாரணைக்குழுவினர் இலங்கைவந்து தேசிய நல்லிணக்க ஆணைக்குழுமுன் தமது பரிந்துரைகள் அல்லது சாட்சியங்களை முன்வைக்கும் போது அது வெளிப்படையாக அமையவேண்டும் எனவும் அங்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க தொடங்கிய நிலையில் ஐ.நா தனது பயணத்தை ரத்து செய்யமுனைவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment