இலங்கை அரசு ஐ.நா முன்பு முழங்காலிட்டது. ஜேவிபி
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு பரிந்துரைப்பதற்கு என நிறுவப்பட்ட குழுவை நாட்டினுள் அனுமதிக்கமாட்டோம் என கொக்கரித்த இலங்கை அரசு இன்று ஐ.நா முன்பு முழங்காலிட்டு அதன் இரட்டை வேடத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது என ஜேவிபியின் பிரச்சாரச் செயலாளரும், ஜனநாயகத் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான பா.உ விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்:
அத்துடன் மேற்படி குழு நியமிக்கப்படவிருந்த தருணம் எக்காரணம் கொண்டும் குழு நாட்டினுள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர்களுக்கு வீசா வழங்கப்படமாட்டாது எனவும் ஜீஎல் பீரிஸ் கூறியிருந்தமையும் , குழு நியமிப்பதை நிறுத்தாவிடத்து உண்ணா நோம்பிருந்து சாகப்போவதாக விமல்வீரவன்ச ஐ.நா அலுவலகம் முன்பு உண்ணா விரதம் இருந்தமையும் முழு பம்மாத்து என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பான் கீ மூனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்தின் எந்தவொரு சக்திக்கும் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அதிகாரம் இல்லை எனவும் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்கக் கூடாதெனவும் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு வழங்கப்படுமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment