அசாஞ்சேயை பாதுகாக்க ஐரோப்பா முயற்சி: அமெரிக்கா அதிருப்தி.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை தங்களிடம் ஒப்படைப்பதற்கு எதிராக ஐரோப்பிய கவுன்சி்ல் இருப்பதால் அமெரிக்கா கடும் அதிருப்தியடைந்திருக்கிறது.பிரான்சில் இருக்கும் ஸ்டிராஸ்போர்க் நகரம் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைநகரங்களுள் ஒன்று. இங்கிருக்கும் அமெரிக்கத் தூதர் வின்சென்ட் கார்வெர் தனது நாட்டுக்கு அனுப்பிய ரகசிய ஆவணம் குறித்து கார்டியன் இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அசாஞ்சேயை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிரான நிலையை ஐரோப்பிய கவுன்சில் எடுத்திருப்பதால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக அமெரிக்க ஆவணத்தை மேற்கோள்காட்டி கார்டியன் கட்டுரையில் தகவல் வெளியாகியிருக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போருக்கு எதிரான கருத்தை ஐரோப்பிய கவுன்சில் உருவாக்க முனைவதாகவும் அந்த ஆவணத்தில் கார்வர் தெரிவித்திருக்கிறார்.ஐரோப்பாவின் மிக உயரிய சட்ட அமைப்பாகவும், ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் தூணாகவும், மனித உரிமைகளைக் காக்கும் அமைப்பாகவும் தம்மைக் காட்டிக் கொள்ள முற்படும் ஐரோப்பிய கவுன்சில், உண்மையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட, செயல்படுத்த முடியாத இலக்குகளைக் கொண்ட அமைப்பு எனவும் கார்வர் சாடியிருக்கிறார்.
0 comments :
Post a Comment