உயிர்பிச்சை கேட்டு கெஞ்சும் புலிகளின் தளபதி ரமேஸ். வீடியோ.
இறுதிகட்ட போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் விசாரணையின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆதாரமான வீடியோக்களையும் புலிகளின் பினாமி அமைப்புக்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளன. அத்துடன் அவர்கள் யுத்த முனையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும்இ சிலர் தமது சகாக்களை காப்பாற்ற சென்றபோது மாட்டிக்கொண்டதாகவேறு அம்புலிமாமா கதைகள் கூற முனைகின்றனர்.
புலிகளின் தளபதிகள் தமது சுகபோக வாழ்வுக்காக எத்தனை சிறார்களை தற்கொலைதாரிகளாக வெடித்து சிதறவைத்திருக்கின்றார்கள்?? பயிற்சி பாசறை முடிந்தவுடன் சயனைடை வில்லைகளை கழுத்தில் கட்டிவிடும் புலித்தளபதிகளின் கழுத்துகளில் என்றுமே சயனைட் வில்லை இருந்ததில்ல. புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் கூட்டம் கைது செய்யப்பட்டிருந்தபோது கூட அவர்களின் கழுத்துகளில் சயனைட்வில்லைகள் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரபாகரனின் அறிவுறுத்தலின் பெயரில் நஞ்சூட்டப்பட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இங்கே காணப்படும் விடியோவின் நம்பகத்தன்னை பற்றி நாம் எதுவும் ஆராட்சி செய்யவில்லை. ஆனால் புலிகளின் தளபதிகள் தமது உயிருக்காக எவ்வாறு கெஞ்சி மண்டாடியிருக்கின்றார்கள் என்பதை தற்போது புலிகளே வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். புலித்தளபதிகளின் இந்த கோழைத்தனத்தை வெளியிட்டு புழைப்பு நடாத்தும் நிலைக்கு புலிகளின் பினாமி அமைப்புகளும், இணையத்தளங்களும் தள்ளப்பட்டுள்ளமை இங்கு புலனாகின்றது.
புலிகளின் நிர்வாகத்தில் புலனாய்வு மற்றும் வேறுவேலைகளுக்காக அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் படையினரால் மிகவும் திட்டமிட்ட முறையில் சுற்றிவளைக்கப்பட்டு இ சயனைட் வில்லைகளை கடிப்பதற்கு இடமளிக்காமல் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பின்னாட்களில் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றபோது சயனைட் உட்கொள்ளாமைக்காக வருடக்கணக்கில் தண்டனை அனுபவித்த வரலாறுகள் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.
ரமேஸ் கெஞ்சும் காட்சியை வீடியோவில் பார்க்க இங்கு அழுத்துங்கள்.
5 comments :
ஆம் இப்படி தமிழனுக்கு எதிராக எப்போதும் இருங்கள் ....இந்திய சதி செய்யாதிருந்தால் ஈழம் பிறந்திருக்கும் ...எட்டப்பர்களும் அழிந்திருப்பார்கள் . மக்கள் ஆதரவு புலிகளுக்கும் புலி ஆதரவு குழுக்களுக்கு மட்டுமே என்பது உலகறிந்த உண்மை ..
is this a war crime or not?????????????????
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
எத்தனையோ மாற்றியக்கப் போராளிகள், காவல்துறையினர், பொதுமக்கள் கெஞ்சியதை அவமதித்தவரின் நிலையைப பாருங்கள். எவருக்கும் காலநேரம் வரும்.
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பல ஆயிரகணக்கானவர்களை படுகொலை செய்த கொடியவர்கள். என்கவுண்டர் செய்வதை தவிர வேறு வழி இல்லை.
இதெல்லாம் தேவையா?
பிழையான தலைமையில் தவறு செய்வதை விட சாதாரண மக்களாகவே வாழ்ந்திருக்கலாம்.
இல்லாவிடின் கருணா, பிள்ளையான் போல் தீர்க்கதரிசனுத்துடன் விலகியிருக்கலாம்.
இப்போ புரிகிறதா?
Post a Comment