விக்கிலீக்ஸ் இயக்குனர் பிணையில் விடுதலை.
சுவீடனில் இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகார்கள் தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் இரகசிய அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு, பல அரசுகளை சங்கடத்தில் ஆழ்த்திய ஜூலியன் அசாங்காவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் செய்த சதித்திட்டமே சுவீடன் பெண்கள் அளித்த புகார் என்று கூறப்படுகிறது.
தனக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வலியுறுத்தலில் பேரில் பன்னாட்டு காவல் படை விடுத்த கைது உத்தரவையடுத்து கடந்த வாரம் லண்டன் காவல் துறையினரிடம் ஜூலியன் அசாங்கா சரண் அடைந்தார்.
கடந்த ஒரு வார காலமாக நீதிமன்ற காவலில் இருந்த அசாங்காவை பிணையில் விடுவிக்கக் கோரி பல மனித உரிமை அமைப்புகள் போராடின. அவைகள் திரட்டியளித்த 2 இலட்சம் பவுண்ட் ரொக்கத்தின் பேரில் வெஸ்ட்மின்டர் நீதிமன்றம் அசாங்காவை இன்று பிணையில் விடுவித்துள்ளது.
ஆயினும், அசாங்கா பிணைய விடுதலைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment