மாத்தறை மாநகர மேயர் ராஜனாமா!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நிர்வகிக்கப்படுகின்ற மாத்தறை மாநகர சபை மேயர் உபுல் நிஷாந்த இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசியல் ரீதியாக இவர் பழிவாங்கப்பட்டமையினாலேயே இவர் ராஜனாமா செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவர் இன்று உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை இவர் ஆதரரித்திருந்தார். இதை தொடர்ந்து இவரது மேயர் பதவி பறிபோனது. நீதிமன்று சென்று தனது பதிவியினை திருப்பி பெற்றுக்கொண்டார். பின்னர் இவர் மீது விசாரணை செய்யவென குழுவொன்று நியமிக்கப்பட்டது. விசாரணைகளில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிவையிர் இவர் தனது பதவியினை ராஜனாமா செய்துகொண்டுள்ளார்.
கடந்த வருடத்திற்கான சிறந்த மாநகர சபையாக இவரது சபை நாடளாவிய ரீதியில் தெரிந்தெடுக்கப்பட்டமை இவர் சிறந்ததோர் ஆழுமை மிக்க செயற்பாட்டாளர் என்பதை உறுதி செய்துள்ளது.
0 comments :
Post a Comment