நீதிமன்று சென்றால் நோர்வேயில் புலிகளுக்கு தடைவிழும் என்கின்றார் சேது.
புலிகளின் வன்முறைகளை ஆதரித்து அவ்வியக்கத்தின் பிரச்சாரப்புயலாக செயற்பட்டுவந்த சேது எனப்படும் சேதுறூபன் தற்போது புலிகளின் புலம்பெயர் கட்டமைப்பின் ஒரு பகுதியுடன் முரண்பட்டு நிற்கின்ற தோற்றப்பாடு தெரிகின்றது. புலிகளியக்கத்தின் தலைமை மற்றும் புலிகளின் ஒரு தொகுதியினரை தொடர்சியாக விமர்சித்துவரும் சேதுவுக்கு எதிராக நோர்வேயிலுள்ள புலிகளின் பினாமி அமைப்பு ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக சேதுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது புலிகள் தன்னை நீதிமன்று கொண்டு சென்றால் அவ்வியக்கத்திற்கு நோர்வேயில் தடைவிழுமென அடித்துக்கூறுகின்றார். அத்துடன் வன்னியில் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளமைப்பே காரணம் எனவும் அவர் கூறுகின்றார். மேலும் அவரது கருத்தினை கேட்க வீடியோவை அழுத்துங்கள்.
1 comments :
ஆகா, கேட்க அருமையாக இருக்கிறது.
உண்மைகள் உறங்குவதில்லை என்பதே உண்மை.
இனியாவது, ஈழத் தமிழர் குறுகிய வட்டத்தை விட்டு வெளிவருவார்களா?
புலம்பெயர் தமிழர் சேது போல் உண்மையான மனிதர்களாக வாழ முன்வருவார்களா?
Post a Comment