கிழக்குமாகாண பொருளாதாரத்தில் உயிர்வாயு உற்பத்தி மாற்றத்தை ஏற்படுத்தும். செந்தீபன்
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் பாரிய வளர்ச்சியினை கண்டுகொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் கிராமப் புறத்தில் மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா அவர்களின் முயற்சியினால் இன்று உயிர்வாயு உற்பத்தி திருகோணமலை அன்புவெளிபுர விவசாய பயிற்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களின் பொருளாதார வழர்சியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென திருகோணமலை அன்புவெளிபுர விவசாய பயிற்சி நிலையத்தை மேற்பார்வையிட்ட அமைச்சின் பிரத்தியேக செயலாளர் நா.செந்தீபன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிலையத்திற்கு அமைச்சின் ஆலோசகரும், மின்சாரப் பொறியிலாளருமான V.S சிவதாசன் ,அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் க.சுரேஸ்குமார் கால்நடை வைத்தியர் மையூரதி ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திக் கழிவுகள் வீண்விரயமாக்கப்படுவதனை கருத்திலெடுத்து அதற்கான மாற்றீட்டு வழியாக விவசாயத்திணைக்களத்தினால் மாட்டெரு மூலமான, வயல்களில் கிடைக்கும் வைக்கல் மூலமான உயிர்வாயு உற்பத்தி மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உயிர்வாயு உற்பத்தி மூலம் மக்களுக்கு வீட்டு சமயலுக்குரிய எரிவாயுவினையும் இரவு
நேர விளக்கெரியும் வாயுவினையும் எந்தவித முதலீடுமின்றி மிக இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மின்சாரக்கட்டணங்கள், எரிபொருள் கட்டணங்களைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். அதுதவிர உயிர்வாயு உற்பத்தியிலிருந்து வருகின்ற கழிவுகள் சிறந்த இயற்கைப் பசளைகளாக தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அதிக விளைச்சல்களையும் இரசாயனப் பசளைகளையும் கொள்வனவு செய்வதனால் ஏற்படுகின்ற பணச்செலவினையும் குறைத்துக்கொள்ளலாம்.
இந்த உயிர்வாயு உற்பத்தியினை அம்பாறை, மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் மிக வரைவில் விஸ்த்தரித்து மக்களின் பொருளாதாரத்தையும், விவசாயத் தொழிநுட்பத்தினையும் அறிமுகம் செய்து உற்பத்தியினை அதிகரிப்பதே எமது நோக்கமெனத் தெரிவித்தார்.
அதேவேளை ஊப்புவெளி கால்நடைப்பண்னைக்கு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள நிலைமைகளையும் அவதானித்தனர். சுமார் 64 வருடங்கள் பழமைவாய்நத இக்கால் நடைப்பண்ணையானது வடக்கே செல்வநாயகபுரம், கிழக்கே நிலாவெளி பிரதான பாதை, மேற்கே அன்புவெளி கிராமம், தெற்கே அபய புரம், ஜின்னா நகர் கிராமங்கள் ஆகியன இப்பண்ணையின் எல்லைகளாக இருக்கின்றன.
இப்பண்ணையானது 120 ஏக்கர் விஸ்தீரம் கொண்டது. இப்பிரதேச மக்களின் பால், முட்டை, இறைச்சி போன்ற தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டு வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் 1983ம் ஆண்டு நாட்டில் தொடங்கிய கலவரம் காரணமாக 1983ம் ஆண்டிலும் 1990ம் ஆண்டிலும் பண்ணை வளங்கள் அழிந்து, பண்ணை முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்து 1991ம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்:
இவ்வாறான இழப்புகளையும் தாண்டி பண்ணை இன்று வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது என்பதை நினைத்து நான் சந்தோசமடைகின்றேன் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று இனக் கோழிகள் (நாட்டுக்கோழி, வுரையிலர், கிரிராச்) ஆகிய கோழியினங்கள் அதிக பாலைத்தரக்கூடிய யேசிக்குறோஸ், சகிவால்; ஆகிய இரண்டின மாடுகள, யமுனாபுரியெனும் ஆட்டினம் கால்நடைகளுக்கான உயரின புல் உற்பத்தி தரமான உயர்தரத்திலான
கோழிக்குஞ்சுகளை மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி என்பன பண்ணையில் இடம்பெற்று வருகின்றது.
0 comments :
Post a Comment