வடகிழக்கில் STF சோதனைகளை மேற்கொள்ளவில்லை. STF Commandant
யுத்தம் முடிவடைந்து நாட்டில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக நிகழக்கூடிய அவசர நிலைகளில் பொலிஸாருக்கு உதவுவதற்காகவே தாம் வழகிழக்கில் நிலைகொண்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தளபதி சரத் சந்திர இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மேலதிக சோதனைகளை மேற்கொள்வதாக இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக விசேட அதிரடிப்படையின் தளபதியை தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்காண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் வடகிழக்கில் காணப்பட்ட தமது முகாம்களில் பெரும்பாலானவற்றை தாம் வாபஸ் பெற்றுள்ளதாகவும், மிகவும் அவசியம் எனக்கருதப்படும் சில முகாம்களே இன்னும் செயற்பட்டுவருவதாகவும் அனால் எவ்வித சோதனைகள், சுற்றிவளைப்புக்களை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment