வவுனியாவில் கிளைமோர் குண்டுகள் கைப்பற்ப்பட்டுள்ளன.
வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றிலிருந்து 06 கிளைமோர் குண்டுகளை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வீடொன்றின் மதிலை உடைக்கும் போது இக்கிளைமோர் குண்டுகள் கிடப்பதை கண்ட வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் இக்கிளைமோர் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இவை ஒவ்வொன்றும் 08 கிலோகிராம் நிறையை உடையதாகவும் நீண்ட காலத்திற்கு முன் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment