கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் பலி.
வறக்காப்பொல அங்குறுவெலப் பிரதேசத்திலுள்ள அடவு பிடிக்கும் நிலையமொன்றை முற்றுகையிட்டு கொள்ளையடிக்க முற்பட்ட கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
கொள்ளையர்கள் பிரதேசத்திலுள்ள காடு ஒன்றினுள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment