உதுல் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.
உயர் கல்வி அமைச்சினுள் அத்துமீறி அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினார் என குற்றம்சாட்டி விளக்க மறியலில் இரு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ண உயர் நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையும், 5 லட்சம் ரூபாய் தனிநபர் பிணையும் விதித்து இன்று பிணை வழங்கிய கொழும்பு மேல்நீதிமன்றம் உதுல் பிரேமரட்ன எதுவித சுவரொட்டி நிகழ்விகளிலும் மற்றும் மாணவர்கள் நடவடிக்கைள் தொடர்பான கூட்டங்களிலும் முற்றிலும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவ்வாறு மீறி செயற்பட்டால் பிணை மறுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுவார் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
மாணவர் சமூகத்தினால் அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பலவிதமான நடவடிக்கைளுக்கும் எதிரான போராட்டங்களை ஜனநாயகமுறையில் முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத்தை உதுல் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment