Sunday, December 5, 2010

மேற்குலகுக்குவரும் சிங்களவர்களை அடித்து துரத்தக்கோருகின்றது புலித்தமிழர் பேரவை.

சுவிஸ் 'ஈழத்தமிழரவையால்' நிறைவேற்றப்படவிருக்கும் 'கிரிமினல்' நடைவடிக்கைகள்!!
சுவிஸ் 'ஈழத்தமிழரவை' என்ற அமைப்பினரால் சுவிஸ் தலைநகாரான (Bern) நகரில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட (03.12.210 வெள்ளிக்கிழமை) மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில்
பல்லாயிரக்கணக்கான (20பேர்) தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஒன்று
கூடலில் சுவிஸ் 'ஈழத்தமிழரவை' யினரால் பல்வேறுபட்ட முக்கிய முடிவுகள் ஒன்றுகூடல்
நடைபெற்ற இடத்திலேயே எடுக்கப்பட்டன.

அதில் முக்கியமான (கிரிமினல்) முடிவுகள் எடுக்கப்பட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அதை நடைமுறைபடுத்துமாறு அறிவுரையும் வழங்கப்பட்டது....
அதாவது (03.12.2010 வெள்ளிக்கிழமை) அன்றிலிருந்து எந்தவொரு சிங்களவனாவது சுவிஸ் நாட்டுக்கோ அல்லது எந்தவொரு மேற்குலக நாட்டுக்கோ வந்தால் கலைத்து கலைத்து அடித்து ஈழத்தமிழரவையினர் வேட்டையாட போகிறார்களாம்!!

இந்த முடிவை ஈழத்தமிழரவை பேச்சாளர் அறிவித்தபோது அங்கு குழுமியிருந்த மக்கள்
(விசுக்கோத்துகள்) பலத்த கரகோசம் எழுப்பி அம்முடிவை அமோதித்ததை காணக்கூடியதாக இருந்தது. இனிமேல் வருபவர்களை தான் கலைத்து கலைத்து அடிகப்போகிறார்களா அல்லது ஏற்கனவே இங்கு மேற்குலக நாடுகளில் குடியேறியிருக்கும் சிங்களவர்களையும் கலைத்து கலைத்து அடிக்கப்போகிறார்களா என்பதும் இவர்கள் மேல் சுவிஸ் அரசாங்கம் எடுக்கப்போகும்
நடவடிக்கைகளை பொறுத்ததாகும்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடுகடத்தும் புதிய திருத்தச் சட்டம்
ஒன்றை அண்மையில் சுவிஸ் அரசாங்கம் எடுத்துள்ள நிலமையில், ஈழத்தமிழர்பேரவையால்
நடைமுறைப்படுத்த போகும் இந்த மாதிரியான 'கிரிமினல்' நடவடிக்கைகளை சுவிஸ் நாட்டு
பொலிசார் அங்கீகரிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.

இலங்கையிலிருந்து சுவிஸ் நாட்டுக்கு அல்லது வேறொரு மேற்குலக நாட்டுக்கு வரும் சிங்களவர்கள் தான் இவர்களின் நடவடிக்கையில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்பதோடு இப்படிப்பட்ட கிரிமினல்களின் நடவடிக்கைகளை மேற்குலகத்தில் வசிக்கும்
சிங்களவர்கள் சுவிஸ் நாட்டு பொலிசாரிடம் தகுந்த ஆதாரத்துடன் முறைபாடு செய்வதன் மூலம் வரவிருக்கும் ஆபத்திலிருந்து தங்களை காப்பாற்றிகொள்ளமுடியும்.

இந்த மாதிரியான கிரிமினல் பேர்வழிகளால் தான் நமது நாட்டு மக்கள் கடந்த மூன்று சகாப்தகாலங்களாக பயங்கரவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டு சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்தார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.. நமது நாடு இன்று
அமைதிப் பூங்காவாக உள்ள நிலையில் கிரிமினல்கள் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்கி
பிணம் வீழ்த்தி பணம் பண்ணும் வியாபாரத்தை ஆரம்பிக்க முனைகிறார்கள். இந்த மாதிரியான கிரிமினல்களை புலம்பெயர் தமிழர்கள் இனம் கண்டு இவர்களிடமிருந்து
விலகியிருக்கவேண்டும்.

இந்த 'ஈழத்தமிழரவை' அமைப்பானது, புலிகள் முள்ளிவாய்காலில் மூழ்கடிக்கப்பட்ட பின்பு சுவிஸில் காகித புலியமைப்பாக தோற்றம்பெற்ற ஒரு அமைப்பாகும். நாளும் பல்வேறுபட்ட அறிக்கைகளை தயாரித்து ஈ.மெயில்கள் மூலம் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க வழிதேடும் ஓர் அமைப்பே இந்த ஈழத்தமிழரவை அமைப்பாகும். புலிகள் இருந்த காலத்தில் சுவிஸ் தமிழர் பேரவை என்ற ஓர் அமைப்பு சுவிஸில் இயங்கியதை நீங்கள் அறிவீர்கள். இந்த அமைப்பானது சுவிஸ் வாழ் தமிழர்களிடம் பல இலச்சம் ரூபாய்களை சுருட்டிகொண்டு மாயமாய் மறைந்த பிற்பாடுதான் புதிதாக 'ஈழத்தமிழரவை' என்ற இந்த அமைப்பானது தோன்றியுள்ளது. ஆகவே இந்த அமைப்பையிட்டு சுவிஸ் வாழ் தமிழர்கள் அவதானமாக இருக்கவும்.

'மடமைகள் ஆர்ப்பரித்து இவ் மண்ணில் நடக்கப்போவது ஒன்றுமில்லை'
கி.பாஸ்கரன்

புலித்தமிழர் பேரவவையின் கொலை அச்சுறுத்தலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்

3 comments :

Anonymous ,  December 6, 2010 at 5:01 AM  

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
இதுகள் எல்லாம் புலம்பெயர் தமிழ் மக்களை ஏமாற்றி வாழும் உண்டியல் கூட்டம்.
மூதேவிகளின் மூஞ்சைப் பார்க்கத் தெரியுது.

Anonymous ,  December 7, 2010 at 4:41 PM  

Please keep it in your mind that Europe is not your own property,to make ugly comments over the singhalese brotherhood.

Anonymous ,  December 8, 2010 at 3:25 PM  

அந்நிய மண்ணில் அகதித்தமிழன் அதற்குள் ஒரு வீரவசனம். தன்மானமாக தன் மண்ணில் நின்று பேச முன்வருவார்களா?
காசே தான் கடவுள் என்று மானமிழந்து, மதிப்பிழந்து, அடிமைகளாக வாழும் சுயநலவாதிகளின் தமிழ் பற்று,
ஏன்? எதற்கு?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com