மஹிந்தவை போர்க்குற்றவாளியாக்க அமெரிக்கா தீவிர முயற்சி செய்துள்ளது. விக்கிலீக்ஸ்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற குற்றங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர்கள் இருவரும் காரணம் எனவும் அவர்கள் போர்க் குற்றவாளிகள் தான் என்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரிஷியா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு ஜனவரி மாதம் அனுப்பிய ரகசிய கேபிள் தகவலில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசு தனது அதிகாரிகளும், படைகளும் தங்கள் பதவிக் காலத்தில் செய்த போர்க் குற்றங்களை தானாக விசாரித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உள்ள சிக்கல் என்னவென்றால் குற்றங்களை செய்தவர்கள் நாட்டின் உயர் அதிகாரிகளாகவும், ராணுவத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இதில் ராஜபக்சே மற்றும் சகோதரர்களுக்கும், எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கும் பங்குள்ளது.
ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் வாழ் இலங்கை தமிழர்களின் வாக்கினை சூறையாடுவதற்கு மிலிபாண்டின் வியூகம்.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரித்தானிய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று இராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர தொடர்பான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சில் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பானவராக கடமையாற்றிய டிம் வைட் என்கிற உயரதிகாரியை மேற்கோள்காட்டி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. பிரித்தானிய அமைச்சர்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குகளைப் பெறவே இலங்கை விவகாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினர்.
சுமார் 300,000 இலங்கைத் தமிழர்கள் பிரிட்டனில் உள்ளனர். இத்தமிழர்கள் ஏப்ரல் 06 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறும் அவ்வதிகாரி தெரிவித்து இருந்தார் என்று அறிக்கையில் உள்ளது. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களில் ஒருவரான ரிச்சர்ட் மில்ஸ் என்பவர் டிம் வைட்டை சுட்டிக்காட்டி அறிக்கையை தயாரித்து இருக்கின்றார் என இன்டிபென்டென்ட் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற செயற்பாடுகளில் தொடர்பிலும், அவ்வாறு இடம்பெற்று இருப்பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் உயர்மட்ட தலைவர்களுக்கு அவற்றில் என்ன பங்கு என்பது தொடர்பிலும் ஐக்கிய அமெரிக்க தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக விக்கிலீக்ஸ் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சில விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய அமெரிக்க தூதுவர் பட்ரிசியா பூட்டனிஷ் தெரிவித்ததாக இராஜதந்திர உறவுகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமான விசாரணைகளும், நாட்டின் இராணுவ குழுக்கள் அல்லது யுத்த குற்ற உத்தியோகபூர்வ அதிகாரிகள் மூலம் ஆட்சியிலுள்ள அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும், உதாரணங்கள் எதுவும் தெரியாது எனவும் அவர் ஜனவரி மாதம் தெரிவித்துள்ளார் என ஏ.எப்.பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment