"விக்கிலீக்ஸ்" இணையதள நிறுவனர் மீது யு.எஸ். வழக்குப் பதிவு
இராணுவ ரகசியங்களை வெளியிடும் "விக்கிலீக்ஸ்" இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா, உளவு பார்த்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாகக் கைப்பற்றி அவற்றை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்றும், இதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிகாரிகள், அத்ந இணையதளத்தின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் அசாஞ்சேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த ஆவணங்கள் வைத்துள்ள ஒவ்வொருவரிடமும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருவதாகவும், "விக்கிலீக்ஸ்" இணையதளத்துக்கு மிகவும் ரகசியமான ஆவணங்களை அளித்தவர்கள் குறித்த விவரமும் ஆராயப்பட்டு, இந்நிறுவன பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய ஸ்வீடனிலுள்ள என்கோபிங் என்னுமிடத்தில் ஒரு மாநாடு ஒன்றை நடத்தியபோது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியையும் மற்றும் ஸ்டாக்ஹோமில் வேரொரு பெண்ணையும் கற்பழித்ததாக புகாரின் அடிப்படையில், இண்டர்போல் காவல் படை அவரை தேடி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment