வன்னி மக்களின் அவலங்களின் பெயரால் அதிகாரிகள் லஞ்ச ஊழல். பா.உ சந்திரகுமார்.
யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கான தேவைகள் என்பது அதிகளவில் காணப்படுவதாகவும், இவ்அவலங்களின் பெயரால் அரச அதிகாரிகள் பல்வேறுபட்ட ஊழல்களில் ஈடுபடுவதை அவதானிக்ககூடியதாகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் சந்திரகுமார் (EPDP) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் அதிகமாகப் பேசப்படும் நிலைமையை இலங்கை மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவே உருவாக்கியுள்ளது எனவும் அதன் செயற்பாடுகளைப் பற்றி நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டிலும் சமூகங்களுக்கிடையிலும் மனித உரிமைகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment