விஜய் நம்பியாரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரிட்டன் , மெக்சிகோ Ban ki Moon க்கு அழுத்தம்.
பர்மாவுக்கான ஐ.நா. தூதர் இப்ராகிம் கம்பாரி, கடந்த டிசம்பர் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதயைடுத்து இவ்விடத்திற்கு ஐ.நா. செயலாளர் பான் கி மூனின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக உள்ள விஜய் நம்பியார், பர்மாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்நியமனத்தை பிரித்தானியா மற்றும் ஐ.நா வுக்கான மெக்சிக்கோ தூதர் ஆகியோர் எதிர்த்துள்ளதுடன் அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யுமாறும் வேண்டியுள்ளனர். ஐ.நா விடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ள இவர்கள் விஜய் நம்பியார் சிறுபாண்மை இனங்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகின்றார் எனக் குற்றச்சாட்டியுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கைக்கு மறைமுகமாக நம்பியார் உதவியதாகவும் அவர் தனது பதவியினை தவறாக பயன்படுத்தியதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment