Friday, December 3, 2010

பயங்கரவாதிகளுக்கு உதவிய 6 பாகிஸ்தானியர் ஸ்பெயினில் கைது.

போலி பாஸ்போர்ட் தயாரித்து பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 6 பாகிஸ்தானியர், மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் ஸ்பெயின் போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட்டைத் தயாரித்து அதை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினருக்கு இவர்கள் கொடுத்துள்ளனர் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் இவர்கள் போலி பாஸ்போர்ட்டுகளைத் தயாரித்து கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்களை பார்சிலோனா நகர போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com