41 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 பிக்கு மாணவர்கள் உட்பட 41 மாணவர்கள் மறு அறிவித்தல் வரை நிடைநிறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடத்தின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய குபுறுபிட்டிய ஞானிஸ்வர தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டமைக்காக இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேரர் இதே குற்றச்சாட்டிற்காக கடந்த வாரம் 84 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment