பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 பேர் பலி:
வட மேற்கு பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் நேற்று அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் 40 பேர் பலியாகினர், 60 பேர் படுகாயம் அடைந்தனர். கலானியில் உள்ள அரசியல் நிர்வாகக் கட்டிடத்தில் தாலிபான் தீவரவாதிகளை ஒழிப்பது பற்றிய கருத்தாய்வு நேற்று நடைபெற்றது. அப்போது திடீர் என்று அந்த கட்டிடத்தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதற்குள் அடுத்த தாக்குதல் நடந்தது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களி்ல் 40 பேர் பலியாகியிருப்பதாகவும், 60 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment