வருடாந்தம் சுமார் 3000 திருமணமாகாத சிறுமிகள் கர்ப்பம் தரிப்பு.
திருமணமாகாத சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் நாடளாவிய ரீதியில் வருடாந்தம் கருத்தரிப்பதாக குடும்ப நலப் பிரிவு நிபுணத்துவ வைத்தியர் நில்மினி ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். வருடாந்தம் 380000 முதல் 420000 வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மிக இளவதில் கருத்தரிப்போரின் எண்ணிக்கை 25000 எனத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் கருத்தரிக்கும் பெண்களில் 7.5 வீதமானவர்கள் 20 வயதுக்கும் குறைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மிக இளவயதில் கருத்தரிப்பதனை தடுப்பதற்கு பெற்றோரும் ஆசிரியர்களும் சிறுவர் சிறுமியருடன் நல்ல உறவைப் பேண வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment