பேஸ்புக் நிறுவனருக்கு 2010ம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது!
உலகில் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் நட்பு வளையத்துக்குள் கொண்டு வர பேஸ்புக்() உதவுகிறது. இந்த இணையதள நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கை 2010ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. 26 வயதே ஆன மார்க் சக்கர்பர்க் இளம் பில்லியனர்கள் பட்டியலில் உள்ளார். மேலும் சமீபத்தில் மார்க் தனது சொத்தின் சரி பாதியை தர்ம காரியங்களுக்கு அளிக்கயிருப்பதாக அறிவித்திருப்பதால் அவரது உயர்ந்த சிந்தனையை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment