ஈரான் நாட்டில் சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் 11 பேர் தூக்கில் போடப்பட்டனர்
ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக வசித்து வருகிறார்கள். அங்கு சன்னி முஸ்லிம்கள் மைனாரிட்டியாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பகுதியில் வசிக்கும் சன்னி முஸ்லிம்களான பலுச் இன மக்களின் உரிமைகளுக்காக ஜுண்டோலா என்ற அமைப்பு ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. இந்த குழுவினர் கடந்த 15-ந்தேதி சபாகர் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இதில் 39 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை ஈரான் போலீசார் கைது செய்தது ஜகெதான் சிறையில் தூக்கில் போட்டனர்.
0 comments :
Post a Comment