என்ட் கவுண்டர் முற்றுப்பெற்றது. 7 பேர் பலி.
வறக்காப்பொல பிரதேசத்தில் கடந்த 10 திகதி அடவு பிடிக்கும் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு கொள்ளையிடச் சென்றவர்கள் அங்கு விரைந்த பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்ட தப்பிச் சென்றனர். தப்பியோடியவர்கள் மீரிகம பிரதேசத்தினுள் உள்ள காடு ஒன்றினுள் சென்று பதுங்கினர். பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படையினரை உதவிக்கு அழைத்தனர். காடு முற்றாக சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது.
முன்று நாள் தேடுதல் முடிவில் கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழாவது நபர் காட்டினுள் இருந்த நீர் தேக்கம் ஒன்றினுள்ள மறைந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. கொள்ளையர்களில் ஒருவர் தற்போதும் இராணுவ சேவையில் உள்ளவர் எனவும் , ஐந்துபேர் இராணுவத்தைவிட்டு தப்பியோடியிருந்தவர்கள் எனவும் 1 பொலிஸ் சேவையிலிருந்து சேவைக்கு சில காலங்களாக சமூகமளிக்காதவர் எனவும் தெரியவருகின்றது.
இராணுவத்திலிருந்த தப்பியோடியவர்களாலேயே இலங்கையில் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக குற்றச் சுமத்தப்படுகின்ற நிலையில் இராணுவத்தை விட்டு ஓடியவர்களை தேடி வரும் நடவடிக்கைகளை தாங்கள் துரிதப்படுத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்த சுமார் 50,000 பேர் பணியிலிருந்து முன் அனுமதியில்லாமல் சென்றுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.
அரசால் அடிக்கடி வழங்கப்பட்டு வரும் பொதுமன்னிப்புகளின் போது கூட அவர்கள் திரும்பி வரவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.
இதில் சிலர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து ஓடிப் போனவர்கள்.
இராணுவத்திலிருந்து ஓடிப் போனவர்களில் மூன்று அல்லது நான்கு பேர், அண்மையில் இரண்டு காவல்துறையினரை சுட்டுக் கொன்ற கூட்டத்தில் இருந்துள்ளனர் என்றும் மேஜர் ஜெனரல் மெதவெல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
காவலரை சுட்டுக் கொன்ற நபர்கள் கொல்லப்பட்டு விட்டாலும் அவர்கள் எப்படியான சூழலில் கொல்லப்பட்டனர் என்பது இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது.
இருந்தும் இராணுவத்தை விட்டு ஓடிப் போனவர்களுக்கும் குற்றங்களுக்கும் இடையேயான தொடர்புகள் இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் குறித்து எழுந்த கருத்துக்களை அவர் புறந்தள்ளியுள்ளார்.
ஆனால் அப்படியான பல சம்பவங்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளன. இராணுவத்தை விட்டு ஓடிப் போன ஒருவர், போதைப் பொருட்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கையெறி குண்டை காவல்நிலையத்தில் வெடிக்கச் செய்து, தன்னைத்தானே கொலை செய்து கொண்டுள்ளார்.
பணியிலிருந்து ஓடிப் போன இராணுவ வீரர்கள் கண்டுபிடிக்கப்படும் போது போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் கூறுகிறது
0 comments :
Post a Comment