இந்தியாவின் மேலுமோர் உயர் இராஜதந்திரி அமெரிக்க அதிகாரிகளினால் அவமதிப்பு.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனை நடத்தி அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இந்தியத் தூதரை டர்பனை கழற்றுமாறு கூறி அவமானப்படுத்தியுள்ளது அமெரிக்கா.
ஐ.,நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் பூரி. இவர் இரண்டு வாரங்களுக்கு முன், அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஹூஸ்டன் விமான நிலையத்தில் அவரது தலைப்பாகையான டர்பனை கழற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் தன்னைப் பற்றி எடுத்துரைத்த ஹர்தீப்பை, தனி அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கச் செய்து சோதனை செய்தனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், தன் கவலையை அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
சமீபத்தில் தான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை, மிசிசிபி விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்ட விதம், சலசலப்பை கிளப்பியது. அவ்விவகாரம் முடியும் முன், அதே போன்ற மற்றொரு விவகாரம் வெளிப்பட்டுள்ளது, பரபரப்பை கிளப்பியுள்ளது.
0 comments :
Post a Comment