Tuesday, December 14, 2010

இங்கிலாந்தில் 20 அழகிகள் மூலம் உளவு பார்த்த ரஷியா

ரஷியா- இங்கிலாந்து இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷியா இங்கிலாந்தில் பெரிய அளவில் உளவு வேலைகளை பார்த்ததாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபர்கள் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரிடம் உளவு பார்க்கும் பணிகள் நடந்து உள்ளன.

இதற்காக 20 அழகிகளை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் தொழில் அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் “செக்ஸ்” விருந்து படைத்து உளவு தகவல்களை சேகரித்து ரஷியாவுக்கு அனுப்பி உள்ளனர்.

உளவு பார்க்கும் பணிக்கு அன்னாசாம்பன் என்ற பெண்ணை தலைவியாக அமர்த்தி உள்ளனர். அவர் இங்கிலாந்தில் படிக்கும் ரஷியா, ஆர்மேனியா, பெலாமல், உக்ரைன் நாட்டை சேர்ந்த அழகான மாணவிகளை தேர்ந்தெடுத்து இந்த உளவு வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதற்காக அந்த மாணவிகளுக்கு பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உளவு தகவல் வெளியானதை அடுத்து இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அழகிகள் யார்? அவர்கள் யார்- யாரை உளவு பார்த்தார்கள்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னா சாம்பன் ஏற்கனவே அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவர். இப்போது அவரை பற்றிய முழு விவரங்களையும் இங்கிலாந்து உளவுத்துறை அமெரிக்காவிடம் கேட்டுள்ளது. இங்கிலாந்தில் வேறு ரஷிய உளவாளிகளும் இருக்கிறார்களா? என விரிவான விசாரணை நடந்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com